சூரிக்கு சாரி சொன்ன சீயான்!

விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான “ஸ்கெட்ச்” படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம், இயக்குநர் விஜய் சந்தர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் விக்ரம், “சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனதோடு சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்லையென்றால் இரண்டு பேரும் ஹீரோவா […]

Continue Reading

கட்சி அறிவிப்பிற்கு தேதி குறித்த கமல்!

கமல்ஹாசனின் அரசியல் கட்சி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான […]

Continue Reading

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக இவரா?

“ஒரு நாள் கூத்து” இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது அறிந்த செய்தி தான். அந்தப் படத்தில் நாயகியாக “மேயாத மான்” நாயகி பிரியா பவானி சங்கர் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது. மாயா, மாநகரம் படங்களைத் தயாரித்த “POTENTIAL STUDIOS” நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராவிட்டாலும், எஸ்.ஜே.சூர்யாவோடு பிரியா நடிக்கவிருப்பதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]

Continue Reading

திருட்டுப் பூனைக்கு சூடு வைக்காமல் கெஞ்சும் திரையுலகம்!

தமிழ் ராக்கர்ஸ்… தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தலைவலி அவனுங்க தான் தற்போதைக்கு. பல கோடி ரூபாய் முதலீடு செய்து, பலர் இரவு பகல் பாராமல் உழைத்து உருவாக்கும் ஒரு படத்தை ரில்லீசாகும் அன்றே இணையத்தில் பதிவேற்றும் “சைக்கோ” திருடர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். இவர்களின் அயோக்கியத் தனமான அட்டூழியத்தால் பல சிறு தயாரிப்பாளர்கள் இன்று முடங்கிப் போகும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி இருக்கிறது. இப்படி அடுத்தவரின் உழைப்பை நவீனமாய்த் திருடும் இவர்களை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இன்று வரை […]

Continue Reading

இந்த கேள்வியை எதாச்சும் ஹீரோகிட்ட கேட்பீங்களா? – பிரியா ஆனந்த்!

தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, ஒரு ஊருல ரெண்டு ராஜா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். தற்போது இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக இவர் நடிக்கும், “காயங்குளம் கொச்சுண்ணி” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாகும். இந்நிலையில் ஒரு பேட்டியொன்றில், திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொரிந்து தள்ளி இருக்கிறார் பிரியா ஆனந்த், “ஒரு இளம் கதாநாயகனிடம் திருமணம் எப்போதென்று […]

Continue Reading

Maddy’s relationship with Hollywood

Madhavan who has multiplied his reputation after ‘Irudhi Suttru’ is believed to have a keen eye and ears for films on different genres. The versatile artist has signed him self with Director Sarkunam for an untitled project that is to be shot extensively in some exotic places around the world.  This mega extravaganza is presented […]

Continue Reading

Sun & Vijay come together

      ‘Oru Nalla Naal Paathu Solren’ is growing big with each passing day. The movie stars Vijay Sethupathi, Gautham Karthik, Gayathrie and Niharika in the lead roles and is directed by Arumuga Kumar and produced by ‘Amme Narayana Entertainment’ and ‘7C’s Entertainment Private Limited’.    The team of ‘Oru Nalla Naal Paathu Solren’ […]

Continue Reading

தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஜீனியஸ்!

தமிழ் சினிமாவில் தொய்வே இல்லாமல் படங்களை இயக்கும் ஒரே இயக்குநர் சுசீந்திரன் தான். எப்போதுமே ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கும் போதே அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவது அவரது வழக்கம். தற்போது “ஏஞ்சலினா” படத்தினுடைய வேலைகள் முடிந்திருக்கும் நிலையில், “ஜீனியஸ்” என்று அடுத்த படத்தையும் ஆரம்பித்திருக்கிறார். இன்றைய சமூக சூழ்நிலையில் குழந்தைகள் மீது கல்வி திணிக்கப்படுவதால், அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்ததைப் பற்றி பேசும்படியாக கதை அமைத்திருக்கிறாராம் சுசீந்திரன். இந்தப் படம் நிச்சயமாக தமிழ் […]

Continue Reading

விஜய் சேதுபதியின் இந்த ஆண்டிற்கான பிள்ளையார்சுழி!

இந்த வருடம் விஜய் சேதுபதிக்கான வருடம் தான் நிச்சயமாக. மனிதர் கையில் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். அவற்றில் எப்படியும் இந்த வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது ரிலீஸ் ஆகிவிடும். அதற்கு அச்சாரமாக, 2018 ஆம் ஆண்டின் முதல் படமாக “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். […]

Continue Reading

மீண்டும் வருகிறார்கள் நாடோடிகள்

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் “நாடோடிகள் 2” திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு […]

Continue Reading