full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

விஜய் சேதுபதியின் இந்த ஆண்டிற்கான பிள்ளையார்சுழி!

இந்த வருடம் விஜய் சேதுபதிக்கான வருடம் தான் நிச்சயமாக. மனிதர் கையில் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். அவற்றில் எப்படியும் இந்த வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது ரிலீஸ் ஆகிவிடும்.

அதற்கு அச்சாரமாக, 2018 ஆம் ஆண்டின் முதல் படமாக “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார்.
ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை சென்சார் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி 2ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும், எட்டு வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.