ட்ரோன்ஸ் திரைவிமர்சனம்
நடிகர்கள் :டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர்.ஜே. தீபக், சசி செல்வராஜ்
இசை: ஹரி எஸ்.ஆர்.
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன்
இயக்கம்: ஆர். ராகவ் மிர்தாத்
தயாரிப்பு: ஜி.எம். மோர்கன் பிலிம்ஸ் – ஜி.எம். மோர்கன்.

கதையின் ஆரம்பம் மூன்று பேர் நண்பர்களாக இருக்கும் தான் படிக்கும் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் பிளாக் ஹோல் என்ற ஒரு அறைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் வெளி உலக தொடர்பில்லாமல் அதிலிருந்து ஒரு ட்ரோன் மூலமாக பார்த்து வருகிறார்கள்.
அப்போது தேவதை போன்ற தோற்றத்தில் இருக்கும் பக்ருதியைப் பார்த்ததும் கிஷோருக்கு காதல் மலர்கிறது. ஆனால், பக்ருதியின் பாட்டியான சூனியக்காரக் கிழவி தேவதர்ஷினி இந்தக் காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் கிஷோர் உள்ளிட்ட நண்பர்களைத் தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார்.
இன்னொரு பக்கம், நகரத்தில் அடுத்தடுத்து மர்மக் கொலைகளைச் செய்யும் சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கக் காவல்துறை தீவிரமாக முயல்கிறது. சூனியக்காரியின் பிடியில் சிக்கும் நண்பர்கள் என்ன ஆனார்கள்? மர்மக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் நபர் யார்? காதல், மாயாஜாலம், மர்மம் எனப் பயணிக்கும் இந்தக் கதையின் முடிவு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இப் படத்தின் மூலமாக அறிமுகமாகிறார். கதாநாயகன் டிராவிட் செல்வம் குறும்புத்தனமாக சுறுசுறுப்பாக ஒரு இளைஞனாக தன் திறமையால் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .
தேவதை போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானி, தனது அழகாலும் திரை இருப்பாலும் கவனம் ஈர்க்கிறார். சில காட்சிகளில் வெவ்வேறு உணர்வுகளுடன் நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தனது நடிப்பில் மாற்றங்களைக் காட்டியிருப்பது கூடுதல் பலம்.
படத்தின் முக்கியமான ஈர்ப்புகளில் ஒருவர் தேவதர்ஷினி. சூனியக்காரிக் கிழவியாகத் தனது அனுபவம் முழுவதையும் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். மிரட்டல், நகைச்சுவை, கோபம் எனப் பல உணர்வுகளைக் கலந்து அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார்.
குறிப்பாக, தன்னை யாரும் உண்மையாக நேசிக்கவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சி மனதைத் தொடுகிறது. இதுவரை நகைச்சுவை மற்றும் மாயாஜால அம்சங்களுடன் நகர்ந்த கதையில், அந்த உணர்ச்சிகரமான தருணம் கதாபாத்திரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது.
மர்மக் கொலைகளை விசாரிக்கும் காவல் அதிகாரியாக வரும் சினிமா வாலா சதீஷ், தனது பாணியில் நகைச்சுவையைக் கூட்டுகிறார். துப்பறியும் பணிக்கு இடையிலும் தனக்குக் காதலி அமையவில்லை என்று புலம்புவது சிரிப்பை வரவழைக்கிறது. கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமைவதுடன் கலகலப்பையும் ஏற்படுத்துகிறது.
அஞ்சலி நாயர், குரேஷி, ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இசை ஹரி எஸ் ஆர் படத்திற்கு ஏற்றவாறு ரசிகபாடியாகவே சிறப்பாகவே இசை அமைந்துள்ளது.
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு படத்தின் கற்பனை உலகத்தை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறது.
இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மற்றும் இந்த ட்ரோன்ஸ் படைப்பு இரு கதையிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் நிச்சயம் இந்த திறமைக்கு ஒரு பாராட்டு குழந்தைகளின் கற்பனை உலகம் மாயாஜாலம் நகைச்சுவை கலந்த காதல் மர்மம் போன்ற அனைத்திலும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் .
முழுக்க முழுக்க லாஜிக் பார்க்காமல், கற்பனை உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு பொழுதுபோக்குப் படமாக ‘ட்ரோன்ஸ்’ அமைந்திருக்கிறது. முதல் பாதியில் இருக்கும் சில தொய்வுகளைக் கடந்து சென்றால், இரண்டாம் பாதியில் மாயாஜாலம், நகைச்சுவை, திருப்பங்கள் என ரசிக்கப் பல அம்சங்கள் இருக்கின்றன.
மொத்தத்தில் இந்த ட்ரோன்ஸ் குழந்தைகளை மட்டும் இல்லாமல் பெரியவர்களும் சேர்ந்து பார்க்கலாம்.
