full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

சூரிக்கு சாரி சொன்ன சீயான்!

விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான “ஸ்கெட்ச்” படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம், இயக்குநர் விஜய் சந்தர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் விக்ரம்,

“சூரி நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனதோடு சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில்
அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்லையென்றால் இரண்டு பேரும் ஹீரோவா நடிக்க ரெடி. அதுவும் முடியாவிட்டால் இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும்.
இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. கதையின் வேகத்திற்கு சூரி வருகிற சீன்கள் தடையாக மாதிரி இருந்ததால நீக்க வேண்டியதானது.
இதற்கு முழு காரணமும் நான் தான். அதற்காக சூரியிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.