Tag: களவாடிய பொழுதுகள்
களவாடிய பொழுதுகளின் நினைவுகள்!
“அழகி” மட்டுமே போதும், தங்கர் பச்சானின் கதை சொல்லும் அழகை உணர்ந்து கொள்வதற்கு. மண்ணையும் உறவுகளுக்கிடையிலான உணர்வுகளையும் எந்த பாசாங்கும் இல்லாமல் பிரதிபலிக்கிற அவரது படைப்புகள் காலத்திற்கும் அவரது பெயர் சொல்லிக் கொண்டே இருக்கும். “கவர்ச்சி, பிரம்மாண்டம், வசூல்” இந்த வார்த்தைகள் பெரும்பாலும் திரைத்துறையை ஆளத் தொடங்கியிருந்த காலத்தில், ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்தவர் தங்கர் பச்சான். இயக்குநராகிய முதல் படத்திலேயே தரமான படத்தோடு வந்து அனைவரின் புருவங்களை உயர வைத்தார். “அழகி” தனலக்ஷ்மியை இன்றும் […]
Continue Readingமுடிவிற்கு வந்த களவாடிய பொழுதுகள் பிரச்சனை
தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான கருத்துள்ள படங்களை எதார்த்தமாக இயக்கும் தங்கர் பச்சான் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்’. கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா […]
Continue Reading
