ஆட்டி – திரை விமர்சனம்
நடிகர்கள் :இசக்கி கார்வண்ணன்,அபி நட்சத்திரா,காதல் சுகுமார், மற்றும் பலர்.
இசை: தீசன்,
ஒளிப்பதிவு : சிபி சதாசிவம்,
இயக்கம்:இசக்கி கார்வண்ணன்.

பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் படம்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அதேபோல் மாற்றலாகி ஒருமலைப்பகுதிக்கு வருகிறார்.
எந்தக் குற்றமும் பதிவாகாத அந்தப் பகுதியில் காவல் நிலையம் இருப்பதே ஆச்சரியமாக இருக்க, அதுவே இசக்கிக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
1880 களில் வெள்ளையர்கள் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய மக்களை வரவழைத்து அங்கே பணி அமர்த்தியதில் அவர்கள் பரம்பரையாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.
கல்வியறிவு இல்லாத அந்த கிராமத்து மக்களின் அடுத்த.தலைமுறையாவது கல்வி அறிவு.பெற வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு வரும் என் ஜி ஓ ஆசிரியர்கள் மூலமாக கல்வியறிவு பெற்ற அபி நட்சத்திரா கல்வி பயிற்றுவித்து வருகிறார்.
அப்படி அங்கே புதிதாக வரும் ஒரு என் ஜி ஓ ஆசிரியர் , அபி நட்சத்திராவிடம் அத்து மீறி நடக்க முயல, கொதித்துப்போன அபி அவரை அறைந்து விடுகிறார். அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் மர்மமாக இறந்து போக, இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணனுக்கு வேலை வருகிறது.
அவர் துப்புத்துலக்க ஆரம்பிக்க, அந்த கிராமத்தை பற்றிய முன்கதை, அங்கு போலீஸ் ஸ்டேஷன் உருவான வரலாறு என்று எல்லா மர்மங்களும் விலக ஆரம்பிக்கிறது.
அது தமிழ் ஆதிக்குடியில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது என்று பெருமைபடச் சொல்லும் கதையாக அமைகிறது.

