டபுள்ஆக்குபன்சி திரைவிமர்சனம்
நடிகர்கள்:சந்தோஷும்,ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்த விஸ்வநாதன், வினோத் கிஷன், வி டிவி கணேஷ், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியானந்தன், பகவதி பெருமாள், மற்றும் பலர்.
இசை :சாம் சி எஸ்,
ஒளிப்பதிவு: சாந்தகுமார் சக்கரவர்த்தி,
இயக்கம் :அஸ்வின் கந்தசாமி,

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதை மையமாகக் கொண்டு கற்பனையாக கலந்த கதை தான் இந்த திரைப்படம் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இப்படி மாறி மாறி வாழும் ஒருவரின் கதை தான் இந்த டபுள் ஆக்குபன்சி இக் கதையே சிரிச்சி ரசிக்கும் படியாகவே சிறப்பாக அமைந்துள்ளது. வில்லனுக்கும் இவர்களின் பிரச்சினை தெரிந்து விடுகிறது. அதற்கு பின் என்ன ஆனது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
ஆரம்பத்திலேயே பார்வையாளர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. பெண் ராஜினியாக ரேஷ்மா வெங்கடேஷும், ஆண் ராஜினியாக சந்தோஷும் நடித்துள்ளனர். ஒரே வாழ்க்கையை இரு வேறு ஆளுமைகள் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் சிக்கல்களும், அதில் காதல் நுழையும் போது உருவாகும் குழப்பங்களும் கதையின் மையமாக அமைகின்றன.
இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குனர் எடுத்திருக்கிறார். வழக்கமான அரைத்த மாவை அரைக்காமல் ஒரு புது கோணத்தில் இயக்குனர் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். ரஜினி என்ற இரண்டு கதாபாத்திரங்கள் தான் படத்தினுடைய பலமே. படத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.
நடிகர்கள் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, ஆண் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பு காட்சிகளும் கிளாப்ஸுகளை குவிக்கிறது. ரஜினி ஆக சந்தோஷ் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு ரக்கட் சாக்லேட் பாயாகவே வலம் வந்திருக்கிறார் என்று சொல்லலாம். படத்திற்கு இன்னொரு பலம் என்றால் அது டயலாக் தான். நிதானமாகவும் நிறைவாகவும் தெளிவாகவும் இயக்குனர் ஒவ்வொரு வசனங்களையும் கொடுத்திருக்கின்றார். இந்த படத்திற்கு பக்ஸ் பகவதி பெருமாள் தான் வில்லன்.
இவருடைய காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. படத்தில் ரொமான்டிக் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அதேபோல் காமெடியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றது. ஆண் ரஜினிக்கும் பெண் ரஜினி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போன் பயன்படுத்தும் டெக்னிக் எல்லாம் சிறப்பு. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். சாம் சி எஸ் உடைய பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையை இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருப்பது நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் டபுள் ஆக்குபன்சி இருக்கிறது.
மொத்தத்தில் டபுள் ஆக்குபன்சி ரசிக்கும்படி முற்றிலும் வித்தியாசமான கதை

