சாருகேசி திரை விமர்சனம்
நடிகர்கள் :Y. G. மகேந்திரன், சுஹாசினி, மணிரத்தினம், சத்யராஜ், தலைவாசல் விஜய், சமுத்திரகனி,ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன், மற்றும் பலர்.
இசை :தேவா,
ஒளிப்பதிவு :சஞ்சய். P. L
இயக்கம் :சுரேஷ் கிருஷ்ணா.

இசை உலகில் கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் ஒருவர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தன் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார். அந்த சூழலில், தந்தையின் இசை மரபிலிருந்து விலகிச் சென்ற மகனுடனான உறவு எவ்வாறு புதிய பரிமாணம் பெறுகிறது என்பதையும், குடும்பத்திற்குள் ஆண்டுகளாக மறைந்து கிடக்கும் மனக்காயங்களை இசை எவ்வாறு இணைக்கிறது என்பது தான் மீதி கதை,
படத்தின் மிகப்பெரிய பலமாக அதன் உணர்ச்சிகரமான திரைக்கதை திகழ்கிறது. குடும்ப உறவுகளின் அருமையையும், தலைமுறைகளுக்கு இடையிலான புரிதலின் அவசியத்தையும் படம் இயல்பாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகள் பார்வையாளர்களை ஆழமாகத் தொட்டு மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இசைய தேவா, தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. இசையே படத்தின் மிகப்பெரிய பலம்.
மற்ற நடிகர்களின் நடிப்பும் , சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். சுஹாசினி, தலைவாசல் விஜய், ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை நேர்த்தியாக கையாள்ந்துள்ளனர். சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது.
மொத்தத்தில், ‘சாருகேசி’ இசை உயிரோட்டம்.

