ஆல் ஏரியா, நம்ம ஏரியா! நின்னு விளையாடும் நிகிஷா படேல்!

  இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல், “புலி” என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார். “தலைவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என […]

Continue Reading

கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜ் : வீடியோ இணைப்பு

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காவேரி நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் தன்னுடைய தமிழ் உணர்வை தெரிவிக்கும் வகையிலும், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் மிக அழுத்தமாக பேசியிருந்தார். அன்றே நடிகர் சத்யராஜின் உருவபொம்மையை கர்நாடக […]

Continue Reading

மிக மிக அவசரம் – மோசன் போஸ்டர் வெளியிடும் பாரதிராஜா

சுரேஷ் காமாட்சியின் திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. ஸ்ரீப்ரியங்கா, ராமதாஸ், முத்துராமன், ஹரிஸ் உத்தமன், அரவிந்த், சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். தற்போது இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏப்ரல் 24ம் தேதி மாலை 5 மணிக்கு, ஒன் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மிக மிக […]

Continue Reading

தனுஷுக்கு எதிரான வழக்கு ரத்து

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல தளங்களில், தனது முத்திரையைப் பதித்து வருபவர் தனுஷ். அவரைத் தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி தாக்கல் செய்திருந்தனர். எந்த அடிப்படை ஆதாரமுமற்ற இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி தாக்கல் செய்திருந்த வழக்கை ரத்து […]

Continue Reading

மீண்டும் மும்பை தாதாவாக நடிக்கிறாரா ரஜினி?

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே, இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி, இப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மக்களின் தலைவராகவும், மிகப்பெரிய டானாகவும் வலம்வந்தவர் ஹாஜி மஸ்தான். இவர் மிகப்பெரிய […]

Continue Reading

முழுவீச்சில் மூன்று படங்கள் முடித்த த்ரிஷா

சினிமாத்துறையில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. சமீபகாலமாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக திரிஷா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே, வெற்றி கொடுக்க […]

Continue Reading

சமூக வலைத்தளங்களில் வைரலான ஜாம்பவான்களின் உரையாடல்!

ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கத்தில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்நிலையில், இந்த டிரைலரை பார்த்த ரஜினிகாந்த், ‘அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை […]

Continue Reading

சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அதாவது, ‘பாகுபலி’ பட முதல் […]

Continue Reading

விஜய் படத்தில் மட்டுமல்ல, விஜய்சேதுபதி படத்திலும்…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் படபூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 24-ந் தேதி அதற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே இல்லை என்றாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளனர். மேலும், நயன்தாராவையும் சிறப்பு […]

Continue Reading