பாகுபலி-2 பட ரீலீஸ் பிரச்சனையைத் தீர்த்து வைத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்

இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் பாகுபலி-2 படத்தை வெளியிட தடை கோரி ஏசிஇ நிறுவனம், சென்னை […]

Continue Reading

வடசென்னையில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு, முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு திடீரென நிறுத்தப்பட்டது. ஆஸ்கர் பரிந்துரைக்காக ‘விசாரணை’ படத்தை அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால், வடசென்னை படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி, கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். […]

Continue Reading

‘பாகுபலி-2’ – சென்சார் ரிசல்ட் வந்துருச்சு!!

2015-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு ‘பாகுபலி-2’ பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கும் தணிக்கை குழுவினர் ‘யு-ஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2 மணி 45 நிமிடங்கள் வரை […]

Continue Reading

தாதாவாக மாறிய சாருஹாசனும், ஜனகராஜும்!

80-களில் வெளியான திரைப்படங்களில், குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால்அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாவார். இவரைப்போலவே, 80, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து புதிய படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘தாதா 87’ என்ற பெயர் வைத்துள்ளனர். […]

Continue Reading

மிக மிக அவசரமாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்!

‘அமைதிப்படை பார்ட் 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நாளை ஏப்ரல் 19 புதன்கிழமை காலை 10 மணிக்கு ட்விட்டரில் வெளியிடுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும். சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல… இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் […]

Continue Reading

‘அரபு தாக்கு’… அப்படினா என்னனு தெரியுமா?

  அரபு நாடுகளுக்கு சென்று திரும்பவர்களுக்கு, அரபு தாக்கு என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே, தான் இயக்கவிருக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரான்ஸிஸ். அப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் கூறியதாவது, “துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்…? அரபு நாட்டுப் பெண்களை கண்கொண்டு பார்ப்பதற்கே கடுமையான […]

Continue Reading

தனுஷை விட்டு விலகிய அமலாபால்

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமலாபால். இந்த ஜோடி ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. இவர்கள் இருவரும் மீண்டும் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வட சென்னை’ படத்தில் நடித்தார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. பின்னர் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தனுஷும் ‘ப.பாண்டி’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் செயல்பட ஆரம்பித்தார். இதனால் ‘வடசென்னை’ படம் டிராப் ஆனதா? என்று […]

Continue Reading

பவர் பாண்டியாக மோகன்பாபு?

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என தான் கால் பதித்த ஒவ்வொன்றிலும், தனக்கென தனி முத்திரையைப் பதித்து வருபவர் தனுஷ். அதைத் தொடர்ந்து, அவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள படம் ‘ப.பாண்டி’. இப்படம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் குறித்த விமர்சனங்களும் படக்குழுவினரை திருப்திபடுத்தும் விதமாக அமைந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை பார்த்த ரஜினியும், தனுஷைக் கட்டிபிடித்து பாராட்டியுள்ளார். அதுமட்டுமில்லாது தனது […]

Continue Reading

மீண்டும் நயன்தாராவைக் கடத்தும் விஜய்சேதுபதி

‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்த விஜய் சேதுபதியும், நயன்தாராவும் தற்போது மீண்டும் புதிய படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது. இப்படத்தில் கதாநாயகி இருந்தாலும், விஜய் சேதுபதிக்கு ஜோடியில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் சில முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு […]

Continue Reading

புது யுக்தியைக் கையாண்ட நடிகை வரலட்சுமி!

இன்று காலை முதல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி கடத்தப்பட்டதாக படங்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பதட்டத்தை உண்டாக்கியது. இதையடுத்து, நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் கணக்கில், தான் கடத்தப்பட்டதாக வெளியான புகைப்படம், தனது அடுத்த பட புரோமசன்கான புதிய யுக்தி.” என்றும், மற்ற விவரங்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Continue Reading