விஜய் படத்தில் மட்டுமல்ல, விஜய்சேதுபதி படத்திலும்…

News

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் படபூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, வருகிற ஏப்ரல் 24-ந் தேதி அதற்கான படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே இல்லை என்றாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளனர். மேலும், நயன்தாராவையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தில், வில்லனாக நடித்திருந்த பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.