ஆகாயத்தில் ஒரு தாரகை  திரைவிமர்சனம்

cinema news movie review

ஆகாயத்தில் ஒரு தாரகை  திரைவிமர்சனம்

நடிகர்கள் : துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன், சாத்விகா வீரவல்லி, சுவாசிகா,மற்றும் பலர்.

இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்,

ஒளிப்பதிவு : சுஜித் சாரங்,

இயக்கம் : பவன் சதினேனி,

தயாரிப்பு: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா, லைக் பாக்ஸ் மீடியா.

இப்படத்தின் கதாநாயகி தான் படித்து பெரிய விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்று கனவோடு படித்து வருகிறார் ஆனால் தன் தந்தையோ இதற்கு தடையாகவே இருந்து வருகிறார் அவர் தனது பத்தாம் படிப்பு தேர்வு எழுதி முடித்த உடனே திருமணம் ஏற்பாடு செய்து விடுகிறார், இனிய நம் கனவு நிறைவேறாது என்று ஒரு குறுகிய வட்டத்தில் அவள் அழுத்தப்படுகிறார் ஆனால் கதாநாயகனாக துல்கர் சல்மான் தன் மனைவியின் கனவே அறிந்து அதற்கு துணையாகவும் உறுதியாகவும் பக்க பாலமாகவும் இருந்து வருகிறார் , கல்பனா  படிப்பதற்கு வேறு ஒரு மாநிலத்தில் செல்கிறார் தன் மனைவியின் படிப்பிற்கு ஆகும் செலவினை சம்பாதிக்க கணவர் மற்றொரு மாநிலத்திற்கு செல்கிறார் இவர் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

துல்கர் சல்மான்,கிருஷ்ணா கதாபாத்திரத்தில்  தனது நடிப்பால்    படத்திற்குப் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார். மனைவியின் கனவுக்காக ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக, மனைவிக்கு ஆதரவாக நிற்கும் காட்சிகளிலும், உணர்ச்சிகள் வெளிப்படும் தருணங்களிலும் துல்கரின் நடிப்பு பாராட்டுக்குரியது. அதுமட்டுமில்லாமல் தன் சகோதரியின் பாசத்தையும் மரியாதையும் விட்டுக்கொடுக்காத   தம்பியாகவும்  காட்சிகளும் அற்புதம்   ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பின் மூலமே பல இடங்களில் ரசிகர்களின் மனதைத் தொடுகிறார். அவரது திரைப்பயணத்தில் நினைவில் நிற்கக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக கிருஷ்ணா நிச்சயம் இடம்பெறும்.

புதுமுகம் சாத்விகா வீரவல்லி, முதல் படம் போல் இல்லாமல் அனுபவம் உள்ள நடிகையாக பதிவு செய்கிறார்  கனவுகளை அடையத் துடிக்கும் இளம்பெண்ணின் மனநிலையையும், குடும்ப வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்வாசிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பால் கதைக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

குறிப்பாக, ஸ்ருதிஹாசன் தனது கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு தனித்துக் கவனம் பெறுகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இசை ஜி.வி. பிரகாஷ் குமார். கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள பின்னணி இசை, பல காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. குறிப்பாக, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் இசையின் பங்களிப்பு ரசிகர்களை கதையோடு ஒன்றச் செய்கிறது.

ஒளிப்பதிவு சுஜித் சாரங் நிச்சயம் இப்படத்தின் வெற்றிக்கு இவர் மிகப்பெரிய பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும் கிராம புறத்தில்  காட்சிகளும் விண்வெளியில்  காட்சிகளும்  வியக்கவிக்கும் அற்புதமான காட்சிகளை அமைத்திருக்கிறார்.

திருமணம், குடும்பம் என்ற பெயரில் பெண்களின் ஆசைகளும் லட்சியங்களும் முடக்கப்படக் கூடாது என்பதையும், குழந்தைகளின் கனவுகளைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையும் இப்படம் உணர்த்துகிறது.

அறிவியல் சார்ந்த ஒரு கதையை வெறும் தகவல்களாகச் சொல்லாமல், அதனுடன் குடும்பப் பாசம், காதல், தியாகம், நம்பிக்கை போன்ற உணர்வுகளையும் இணைத்து அழகான சினிமா அனுபவமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பவன்.

மொத்தத்தில் இந்த ஆகாயத்தில் ஒரு தாரகை நிச்சயம் அனைவரும் வீட்டிலும் இப்படி ஒரு தாரகை இருப்பாள்.