இந்தியாவில் ‘டூம்ஸ்டே’ கொண்டாட்டம் ஆரம்பம்

cinema news News

இந்தியாவில் ‘டூம்ஸ்டே’ கொண்டாட்டம் ஆரம்பம்

மார்வெலின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கிய வேகத்திலேயே டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்கின்றன

உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியது. இதையடுத்து, படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #OpenDoomsdayBookings என்ற ஹேஷ்டேக் மூலம் வைத்த கோரிக்கையின் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிகாலை 12.01 மணி முதல் இரவு 11.55 மணி வரையில் பல்வேறு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதுடன், சில காட்சிகள் ஏற்கெனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன. முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களை மீண்டும் பெரிய திரையில் முதல் நாள் முதல் ஷோவிலேயே காண வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது நிரூபணமாகியுள்ளது.

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உலகம் முழுவதும் இப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரீமியம் திரையரங்குகளுக்கான முன்பதிவு மட்டும் முதல் 24 மணி நேரத்தில் 16.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது.

மேலும், இப்படத்தின் முதல் முழுநீள டிரெய்லர் வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே 503 மில்லியன் பார்வைகளைக் கடந்து, திரைப்பட வரலாற்றில் அதிக பார்வைகளைப் பெற்ற இரண்டாவது பெரிய டிரெய்லர் வெளியீடு என்ற சாதனையையும் படைத்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில் உள்ளிட்ட சர்வதேசச் சந்தைகளிலும் முன்பதிவு விற்பனையில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக வட்டாரக் கணிப்புகளின்படி, இப்படத்தின் முதல் வார இறுதி உலகளாவிய வசூல் 1 பில்லியன் டாலரைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், உலக பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இந்தியாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. படத்திற்கான முன்பதிவைத் தொடங்க வேண்டும் எனப் பல வாரங்களாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். #OpenDoomsdayBookings என்ற ஹேஷ்டேக்குடன் மார்வெல் இந்தியா நிறுவனத்திடம் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஒரு ரசிகர், “மார்வெல் இந்தியா, எங்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்? டூம்ஸ்டே டிக்கெட் முன்பதிவைத் தொடங்குங்கள்!” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மற்றொரு ரசிகர், “பிரேக்கிங் நியூஸ்! ஜென் ஜீ தலைமுறையினரின் பொறுமை தீர்ந்துவிட்டது. இதற்கும் மார்வெல் இந்தியாதான் காரணம். உடனடியாக டூம்ஸ்டே முன்பதிவைத் தொடங்குங்கள்!” என நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளதால் இந்திய ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவில் இப்படத்தை ரசிகர்கள் காண முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மார்வெல் ஸ்டுடியோஸ் பிரசண்ட்ஸின் இன்ஃபினிட்டி விஷன் மற்றும் பிற பிரீமியம் திரையரங்குத் தொழில்நுட்ப வடிவங்களிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

‘டூம்ஸ்டே’ படத்திற்கான கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. ரசிகர்களின் கோரிக்கைக்கு மார்வெல் பதிலளித்துவிட்டது. இனி டிக்கெட்டுகள் விற்றுத் தீரும் முன் முன்பதிவு செய்வதுதான் ரசிகர்களின் அடுத்த இலக்கு. உடனே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!