சத்யவான் சாவித்திரி    திரைவிமர்சனம்

cinema news movie review

சத்யவான் சாவித்திரி           திரைவிமர்சனம்

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பாலா சரவணன், ஷில்பா மஞ்சுநாத், மற்றும் பலர்.

இசை: சாம்.சி.எஸ்,

ஒளிப்பதிவு : அருள் வின்சென்ட்,

இயக்கம் : பிரவீன் எஸ். விஜய்.

தயாரிப்பு : வெடிகாரன்பட்டி எஸ். சக்திவேல்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் கோயம்புத்தூரில் தனது அப்பா தாத்தா செல்லத்தில் வளர்ந்து வருகிறார், கீர்த்தி சுரேஷ் க்கு ஒருநாள் திருமணம் செய்ய வைக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டாரை அழைக்கின்றார்கள்  ஆனாலும் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்லாமல் தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளைவிடம் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞராக உயர வேண்டும் என்பதே அவரது லட்சியம்.    தெரிவிக்கிறார் ஆனாலும் அவர் அதை ஏற்று ஏற்காமல் மாறுதலாக கூறிவிட்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது பிறகு சென்னையில் வந்து வசிக்கிறார்  மிகப்பெரிய வழக்கறிஞர் மிஷ்கினிடம்   உதவி வழக்கறிஞராக பணியில் சேருகிறார்.

ஆரம்பத்தில் இருந்து இருவருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நகைச்சுவையான காட்சிகளில் மூலமாக படம் சுவாரஸ்மாக நகர்கிறது ,ஒரு கட்டத்தில், ஒரு வழக்கின் அணுகுமுறை தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் தனது மூத்த வழக்கறிஞரான மிஷ்கினுக்கு எதிராகவே நீதிமன்றத்தில் களமிறங்குகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வழக்கில் அவர் வெற்றியும் பெறுகிறார்.

மிஷ்கின்  23 ஆண்டு காலம் தனது எடுத்துக் கொண்ட வழக்கில் தோல்வியை சந்திக்காமல் வருகிறார், சற்றும் எதிர்பாராமல் தன்னிடம் உதவி வழக்கறிஞராக  பணிபுரிய வந்துருக்கும் வழக்கறிஞரிடம் முதன் முறையாக ஒரு தோல்வியை சந்திக்கிறார்  அதை தன்னால் ஏற்க முடியாமல் அதன் விளைவு ஈகோவாக மாறி கீர்த்தி சுரேஷ் பழிவாங்க வேண்டும் என்று அவரின் கணவர் மீது செய்யாத ஒரு கொலை குற்றத்தை  சுமத்துகிறார்,

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக மிஷ்கினே ஆஜராகிறார். எப்படியாவது அவரது கணவருக்குத் தண்டனை பெற்றுத் தருவேன் என்று மிஷ்கின் சவால் விடுக்க, தனது கணவரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தில் போராடத் தயாராகிறார் கீர்த்தி சுரேஷ்.

தனிப்பட்ட ஈகோவுக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கும் இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இறுதியில் வெற்றி யாருக்கு? கீர்த்தி சுரேஷ் தனது கணவரைக் காப்பாற்றினாரா? மிஷ்கின் தனது சவாலில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் மிகப்பெரிய தூணாகவே நிற்கிறார் அவர் இதுவரை பண்ணாத கதாபாத்திரமாகவே அமைந்திருக்கிறது அவர் நடிப்பின் திறமையின் மூலமாக அதை நன்றாகவே வெளிபடுத்திருக்கிறார், அதுவும் நீதிமன்றத்தில் அவர் வாதாடும் காட்சிகள் மிக அற்புதம் அது மட்டுமில்லாமல் கதையில் ஒரு திருப்புமுனையாக ஒரு சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்திருக்கிறார்,

மிஷ்கின் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யமாக மாற்றுகிறார். ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞருக்கே உரிய கம்பீரம், தோல்வியால் ஏற்படும் ஈகோ, பழிவாங்கும் மனநிலை என உணர்வுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கீர்த்தி சுரேஷுடன் அவர் மோதும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளன. இருவருக்கும் இடையிலான நடிப்புப் போட்டி திரைக்கதைக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

புதுமுக நடிகர் சாருகேஷ் தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கதையின் போக்கில் தனது திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அறிமுகப் படத்திலேயே நம்பிக்கைக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

பாலசரவணன், படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு இடையே நகைச்சுவையை அழகாகக் கலந்து கொடுக்கிறார். பல இடங்களில் தனது இயல்பான நகைச்சுவையால் சிரிக்க வைப்பதுடன், உணர்வுபூர்வமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.

சாம் சி.எஸ். இசை படத்திற்கு மற்றொரு முக்கியமான பலம். பாடல்களும் பின்னணி இசையும் கதையின் உணர்வுகளுக்கும் பரபரப்பான காட்சிகளுக்கும் தேவையான வலுவைச் சேர்க்கின்றன. குறிப்பாக, நீதிமன்ற மோதல்களிலும் திரில்லர் காட்சிகளிலும் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

ஒளிப்பதிவும் படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நடிகர்களின் நடிப்புக்கும் கதையின் தீவிரத்தன்மைக்கும் தேவையான காட்சியமைப்புகளை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இயக்குநர் பிரவீன் எஸ். விஜய், இது தனது முதல் திரைப்படம் என்பதை மறக்கடிக்கும் வகையில் கதையைத் தேர்வு செய்திருப்பதுடன், அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் கதையை வெறும் வாதப் பிரதிவாதங்களுடன் நிறுத்திவிடாமல், அதற்குள் சஸ்பென்ஸ், திருப்பங்கள், உணர்ச்சிகள், நகைச்சுவை எனப் பல அம்சங்களைச் சரியான விகிதத்தில் இணைத்திருப்பது அவரது இயக்கத் திறமைக்குச் சான்று.

குறிப்பாக, காட்சிகளை நகர்த்தும் விதம், வசனங்களின் கூர்மை, நீதிமன்ற மோதல்களை அமைத்திருக்கும் விதம் ஆகியவை படத்திற்குப் பெரும் பலமாக உள்ளன. முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுவாரஸ்யமான திரை அனுபவமாக மாற்றியிருக்கும் இயக்குநர் பிரவீனுக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் சத்யவான் சாவித்திரி  அனைத்து பெண்மணிகள் பார்க்க வேண்டிய சாவித்திரி.