கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்

K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் 7 பிற நாட்டு திரைப்படங்களோடு தேர்வு ஆன ஒரே தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
‘Password’ என்ற தமிழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘Screen movie’ வகையைச் சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லபடுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. Smartphone addiction என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது. அந்த செவ்வக சாதனத்திற்கு ஒருவர் அடிமையாவதன் காரணிகளை அதன் அடிநாதத்திலிருந்து விளக்குபடி உருவாக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறதா மனித இனம்? அல்லது மனிதனின் கோர மனதின் கருவியாகத் தொழில்நுட்பம் மாறியிருக்கிறதா? இந்த இரு கேள்விகளுக்கும் இடையே, விறுவிறுப்பான ஒரு திரைக்கதையாக விரிகிறது இந்தப் படம்!
அரவிந்த் சுந்தர் மற்றும் காவ்யா அனில் முதன்மை காதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘Haamam’ மேகா ராஜன் , ‘கொட்டுக்காளி’ முருகன் கோவிந்தசாமி , ‘Vikkals’ சிபி , பொற்கொடி, சுரேந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் (JD) ஆகியோர் இசை அமைத்து உள்ளனர். திரைக்கதை, ஒளிப்பதிவு , VFX பணிகளை படத்தின் இயக்குனர் கண்ணன் அவர்களே மேற்கொண்டுள்ளார்.
மிகக் குறைந்த நபர்களைக் கொண்டு குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் அதன் கதைக்களமும், திரைக்கதையும் பெரும் படங்களுக்கு மத்தியில் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.
20 நவம்பர் முதல் 28 நவம்பர் வரை நடைபெறும் IFFI Goa திரைப்பட விழாவில் World Premiere ஆக முதன் முதலில் திரையிடப்படுகிறது. அடுத்த வருடம் திரையில் வெளி வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
‘Scroll’ Nominated for ICFT-UNESCO Gandhi Medal at the 57th International Film Festival of India, Goa
‘Scroll’, produced under the banner of K16 Studios, has been officially selected for screening in the Indian Panorama section at the 57th International Film Festival of India (IFFI 2026), to be held in Goa. Additionally, the film has been nominated for the ICFT-UNESCO Gandhi Medal. It has earned the distinction of being the only Tamil film selected among seven other international films for this prestigious recognition.
This is the second feature film by Kannan, who previously garnered attention with his Tamil film Password. ‘Scroll’ belongs to the Screen Movie genre, an unconventional cinematic format in which the entire story unfolds through the protagonist’s mobile phone screen. Centred on the theme of smartphone addiction, the screenplay delves into the underlying factors that keep individuals glued to their screens.
Is humanity falling under the grip of technology? Or is technology becoming a weapon in the hands of the evil human minds? Unfolding between these two intriguing questions, the film delivers a gripping and thrilling cinematic experience.
Aravinth Sundar and Kavya Anil play the lead roles. The film also features ‘Haamam’ Megha Rajan , ‘Kottukkaali’ Murugan Govindasamy, ‘Vikkals’ Sibi , Porkodi, and Surendhar in significant roles. The music is composed by Johan and Dinakar (JD). The film’s director, Kannan, has also handled the screenplay, cinematography, and VFX.
Despite being made on a modest budget with a very small crew, ‘Scroll’ has earned its place at the prestigious Goa International Film Festival, standing alongside major productions. Its distinctive concept, and innovative screenplay have brought the film this well-deserved recognition on a prestigious international platform.
The film will have its World Premiere at the International Film Festival of India (IFFI), Goa, which takes place from 20 to 28 November. It is expected to have its theatrical release next year.
