நடிகர் அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகில் தன் திறமையான நடிப்பால் கால் பதித்தார் ஆரம்பதில் கைதி திரைப்படத்தில் இளம் வில்லனாக வேடத்தில் அசத்தலாக நடித்திருப்பர், அவரது நடிப்பு திறமையாலும் குறுகய கால கட்டத்தில் அநீதி,போர், ரசவாதி, போன்ற திரைப்படங்களில் இளம் கதாநாயகனாகவும் மாறி தன்னால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நன்றாகவே நான் நடிப்பேன் என்று நிரூபித்துள்ளார். அவரது வசீகரமானா கம்பீரமான குரலலும் கவர்ந்தார், அவரது குரல் திரையரங்குகளில் எப்படி இருக்கும் என்றால் காட்டில் சிங்கம் கர்ஜனைக்கும் போல் கணீர், கணீர் என்று இருக்கும். அவரது குரலுக்கு சாய்க்காத செவிகல கிடையாது.
தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டு இருக்கும் பாம் என்ற திரைப்படத்தில் கதாநாயனக அர்ஜுன் தாஸ் அவர்களின் நடிப்பு மிகவும் வித்தியாசமான நடிப்பாக அமைந்துள்ளது இதுவரை அவர் பன்னிராத கதாபாத்திரமாக அமைந்து இருக்கும், மிகவும் பயந்த சுபாவம் உள்ளவனுகவும் அமைதியானவனும் ஒரு அப்பாவி இளைஞராகவும் நடித்து அசைத்திருப்பார், அதுவும் தன்னை அடிக்கும் போது தாங்கிக்கொண்டு நிற்கும் காட்சிகள் நம் மனதில் நிற்கிறார், குறிப்பாக கிளைமாக்ஸில் சாமி வந்தது போல ஆடுவார் காட்சி இருக்கும் அவரது குரலுக்கு அந்த காட்சிக்கும் பிரம்மிப்பு.
தமிழ்த்திரை உலகலில் மிகப் பெரிய ஒரு இடத்தையும் தவிர்க்க முடியாத நடிகராகவும், இடம் பிடித்துள்ளார், பெரும்பான ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார், தமிழ் திரை உலகம் மட்டும் இல்லாமல்,பான் இந்தியா நடிகராகவும் நிச்சியம் ஒரு சிறந்த நடிகராக வலம் வருவார், மேலும் பல வெற்றிப் படிகளை கடந்து செல்வார் என்று கடவுள் அருளால் என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

