29 திரை விமர்சனம்
நடிகர்கள்:விது,பிரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், மற்றும் பலர்.
இசை :சேன் ரோல்டன்,
ஒளிப்பதிவு :மாதேஷ் மாணிக்கம்,
இயக்கம் :ரத்தின குமார்,
தயாரிப்பு: ஜி ஸ்குவாட், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ.

கதாநாயகன் விது தன் கிராமத்தை விட்டு வேலை தேடி வருகிறார் தனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டும் என்று லட்சியத்துடன் சென்னைக்கு வருகிறார், கதாநாயகி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஒரு இலட்சியத்துடன் வாழ்கிறார் கதாநாயகனும் நாயகியும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டு காதல் வசப்படுகிறார்கள் ஒரு இளைஞன் தனது 29 வது வயதில் அனுபவிக்கும் அவமானங்கள் ஏக்கம் வேலை காதல் வாழ்க்கை அனைத்து எப்படி இருக்குமோ அதை திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர் ரத்தினகுமார். இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா இல்லையா இதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னவென்று என்பதுதான் மீதி கதை.
கதாநாயகன் விது முதல் படம் போல் இல்லாமல் தன் நடிப்பால் நம்மை வியக்க வைத்து உள்ளார் அவர் என் காதலியிடம் பேசும் வசனமோ நடிப்பும் கச்சிதமாக நடித்துள்ளார், குறிப்பாக காதல் சொல்ல தருணம் மிக அழகு.
ப்ரீத்தி அஸ்ராணி. தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள திறமையான நடிகைகளில் ஒருவராக அவர் இந்தப் படத்தில் மிளிர்கிறார். காதலியாகவும், வாழ்க்கையை உணர்த்தும் துணையாகவும், உணர்ச்சிகளை கண்களில் பேச வைக்கும் நடிகையாகவும் அசத்தியிருக்கிறார். பல காட்சிகளில் பார்வையாளர்களை நெகிழ வைப்பதோடு, “இப்படி ஒரு காதலி நமக்குக் கிடைக்க மாட்டாளா?” என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறார். கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பது போல அவரது நடிப்பு அமைந்துள்ளது.
மகேந்திரன் வில்லன் கதாபாத்திரத்தில் குறைந்த நேரமே வந்தாலும், கதையின் நகர்வுக்கு தேவையான பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்.
இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் மெல்லிசையால் நம் மனதை வருடுகிறது.ஒவ்வொரு காட்சியையும் மேலும் உயிர்ப்பித்திருக்கிறார்.
ஒளிப்பதிவுச் சிறப்பாக அமைந்துள்ளது இயக்குநரின் எண்ணங்களை காட்சியாக மாற்றும் திறமையான ஒளிப்பதிவாளராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
இயக்குனர் தன் படைப்பால் காதல் காட்சிகளே நம்மை உணர செய்கிறார் நிச்சயம் பாராட்டுக்கள் ஆனால் படத்தின் நீளம் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்
மொத்தத்தில் 29 சலிக்காத காதல் காவியம்.

