ரஜினி படத்தின் சேட்டிலைட் உரிமை பெற்ற விஜய் டிவி

கபாலி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காலா. வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஹுயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 27ம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக தள்ளிப்போனது. ஸ்டிரைக் முடிவுக்கு வந்த நிலையில் காலா திரைப்படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் […]

Continue Reading

அஞ்சலி பாட்டீல் சொன்ன காலா ரகசியம்

ரஜினியின் ‘காலா’ படம் யு.ஏ. சான்றிதழ் பெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இதில் ஹீமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி பாட்டீல், இந்த படத்தில் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத்தெரிந்த மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி. பேட்டி ஒன்றில் ‘காலா’ படம் பற்றி அஞ்சலி பாட்டீல் அளித்த பேட்டியில்… “ ‘காலா’ ஒரு அரசியல் படம். இந்த படத்தில் […]

Continue Reading

டப்பிங் முடித்த காலா வில்லன்

da காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்! ‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி […]

Continue Reading

பா.இரஞ்சித் வழங்கும் கானா இசை நிகழ்ச்சி

முதன் முறையாக கானா இசையுடன் ராப் மற்றும் ராக் இசையும் இணைந்து புதுவித இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவிருக்கிறது. சென்னையின் கானா இசைக்கலைஞர்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள். இதுவரை கானா மட்டும் பாடிக்கொண்டிருந்த நம் இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய ஆப்பிரிக்க இசைகளான ராப், ராக் இசையோடு இணைத்து ஒரு புதிய இசை அனுபவத்தை சென்னை மக்களுக்கு தரவிருக்கிறார்கள். இசைக்கலைமூலமாக புரட்சியும், விடுதலையும் பெற முடியும் என்பதற்கு ஆப்பிரிக்க இசைக்கலைஞர்களை உதாரணத்திற்கு சொல்வார்கள். பல புரட்சிகளுக்கு பாடல்களும், இசையும் பெரும் […]

Continue Reading

எங்களுக்குள் பிரிவினை இல்லை- பா.ரஞ்சித்!

தி.நகர் சர்.பி.டி.தியாகராய ஹாலில் “அறம்”, “விழித்திரு”, “ஜோக்கர்” படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜு முருகன் ஆகியோருக்கு “விடுதலை கலை இலக்கிய பேரவை” மற்றும் “மருதம் கலைக்கூடம்” இணைந்து பாராட்டு விழா நடத்தின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் பல நாட்களாய் நிலவி வந்த புரளிக்கு கோபி நயினார் […]

Continue Reading

பா.ரஞ்சித் தொடங்கி வைத்த “பற”!

‘பச்சை என்கிற காத்து’,  ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீரா. இவர் அடுத்ததாக ‘பற’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ‘கலிங்கா’ என்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.  இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் […]

Continue Reading

நாங்கள் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் : கோபி நயினார்

இயக்குநர் பா ரஞ்சித் அறம் படம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவரது வாழ்த்து பதிவில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் பெயர் இடம்பெறாதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில் கோபி நயினார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். […]

Continue Reading

ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் ஆண்டனி

ஆண்டனி புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஆண்டனி’. அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் இயக்கும் இப்படத்தில் ‘சண்டக் கோழி’ புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களைக் கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் வெளியிட்டார். சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சகாப்தம் படைத்த […]

Continue Reading