full screen background image
Search
Friday 10 May 2024
  • :
  • :
Latest Update

டப்பிங் முடித்த காலா வில்லன்

da

காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர் தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை முடித்துள்ளார்!

‘கபாலி’ படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் ‘காலா’. இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று யூ- டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது.

இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை இன்று முடித்துள்ளார்.

இத்திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.