நல்லுறவு தேவை என்பதாலேயே, நெருக்கம் காட்டுகிறோம் : வெங்கய்யா நாயுடு

மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த பின் நிருபர்களுக்கு வெங்கய்யா நாயுடு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை. திமுக மற்றும் காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவு தேவை என்பதால் தான், தமிழக அரசுடன் நெருக்கம் காட்டுகிறோம். நான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பட்டியலில் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் […]

Continue Reading

நானும் ரஜினிகாந்த் ரசிகன் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ

கடந்த 22ஆம் தேதி, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட […]

Continue Reading

ஓபிஎஸ் அறிவிப்பால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செம்மலை, கே.பி.முனுசாமி, பாண்டியராஜன், ஜெயபால், சண்முகநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பன்னீர்செல்வம் அணி சார்பில் அறிக்கை ஒன்று […]

Continue Reading

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

  முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின் போது எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியில், “பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் பிரச்சினைகள், முக்கிய தேவைகள், அதற்கு மத்திய அரசின் நிதி உதவி பற்றி பேசினோம். தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் […]

Continue Reading

பெருச்சாளிக்கு பதிலடியாக கடல் நத்தை!!

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்து உள்ளார். அவருக்கு அ.தி.மு.க. கட்சியின் வரலாறு தெரியாது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவர் சிறைக்கு சென்று விடுவார், நான் முதல்-அமைச்சர் ஆகி விடுவேன் என்று கூறி தன்னுடைய சபாநாயகர் பதவியை இழந்தவர். அவர் சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜனுடைய தயவில் மந்திரி பதவி வாங்கியவர். நாங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு […]

Continue Reading

எனக்கு இதுவரை ஆதரவு அளித்த நிர்வாகிகள் – தொண்டர்களுக்கு நன்றி: டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கட்சியில் தினகரன் குடும்பத்தினரின் தலையீடு இருப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை என்பதால், கட்சியின் நலன் கருதி இந்த முடிவினை எடுத்திருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அதேசமயம், தினகரனுக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் இந்த முடிவினை கண்டித்தனர். அதன்பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், தன்னை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக எடுத்த முடிவிற்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், நான் ஒதுங்கி இருப்பதால் நன்மை நடப்பதாக இருந்தால் […]

Continue Reading

அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு அட்வைஸ்

ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அதிமுகவில் நடக்கும் பிரச்னைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ., தலையிடவில்லை. இது அவர்களின் உட்கட்சி பிரச்னை. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழக மக்களின் நலனுக்கு செயல்பட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.

Continue Reading