சக்தி திருமகன் திரைவிமர்சனம்
நடிகர்கள்:விஜய் ஆண்டனி, கண்ணன்,செல் முருகன், வாகை சந்தரசேகர், மற்றும் பலர்,
இசை:விஜய் ஆண்டனி,
ஒளிப்பதிவு:ஷெல்லி ஆர்
இயக்கம்:அருண் பிரபு புருசோத்தமன்,
தயாரிப்பு:விஜய் ஆண்டனி பிலிம் காபோரேஷன்.

‘அருவி’ மூலம் தனக்கென்று ஓர் இடத்தைப் பெற்ற இயக்குநர் அருண் பிரபு, விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியுள்ள புதிய படம் சக்தி திருமகன்.
தலைமை செயலகத்தில் புரோக்கராக இயங்கும் விஜய் ஆண்டனி, பல கோடிகளுக்காக அரசியல் வலையில் சிக்கி அதிலிருந்து தப்பிக்க முயல்வது தான் கதை. ஆரம்ப கட்டத்தில் அரசியல் அலுவலக சூழல்களை படம் நன்றாகப் படம் பிடித்தாலும், இரண்டாம் பாதியிலிருந்து கதை முழுவதும் சிதறி, லாஜிக் இல்லாத திருப்பங்களால் பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறது.
முதல் பாதி சுறுசுறுப்பாக சென்று, அரசியல் அலுவலக லாபி, ஒப்பந்தங்கள், அதிகாரிகளின் குணாதிசயங்களை கூர்மையாக வெளிப்படுத்துகிறது.
விஜய் ஆண்டனி: புரோக்கர் வேடத்தில் நன்றாக அமைந்து, அவரது நடிப்பு வெளிப்பாடு கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக அமைந்துவுள்ளது.
கண்ணன் (வில்லன்): எதிரி வேடத்தில் வந்து, அவரது கதாபாத்திரம் பல இடங்களில் பலம் கூட்டிகிறது .
மற்ற நடிகர்களின் கதாபாத்திரம் கதைக்கு துணை நிக்கிறது.
இசை: விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ராசிக்கும் படியாக அமைத்துள்ளார்,
ஒளிப்பதிவு: ஷெல்லி ஆர். காலிஸ்ட்டின் கேமரா வேலை சிறப்பாக உள்ளது.
ஆரம்ப கட்ட அரசியல் அலுவலகக் காட்சிகள்,சில பிளாஸ்பேக் மற்றும் பெரியார் தொடர்பான குறிப்புகள்.மற்றும் விரு விருப்பனா காட்சிகள் அற்புதம்.
இரண்டாம் பாதியில் நீலத்தை கொஞ்சம் குறைத்துஇருக்கலாம்.
சாதாரண சினிமா பாணி கிளைமாக்ஸ் சாமானியர்களுக்கு புரியாத அளவு விபரங்கள் தான்.படதற்கு தொய்வுதான்.
“சக்தி திருமகன்” ஒரு வலுவான அரசியல் திரில்லராக துவங்கி, சாதாரண சினிமா பாணியில் சொல்லும் படம்.

