பெத்தி  திரைவிமர்சனம்  

cinema news movie review

பெத்தி  திரைவிமர்சனம் 

நடிகர்கள் :ராம் சரண், ஜானுவி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, பொமன் இரானி மற்றும் பலர்,

இசை: ஏ ஆர் ரகுமான்,

ஒளிப்பதிவு: ரத்தினவேலு ,

இயக்கம்: புச்சி பாபு சனா,

தயாரிப்பு: விருத்தி சினிமாஸ்.

ஊர் பெயர் இல்லாமல் அரசாங்கத்தின் எந்தவிதமும் உதவி பெறாமல் மற்றும் எந்த அடையாளம் இல்லாமல்   மலை அடிவாரத்தில் ஒரு துடிப்பான வீரமுள்ள இளைஞனாக வாழ்ந்து வரும் கதாநாயகன் தான் ராம்சரண்  முதலில் கிரிக்கெட் வீரராக தன் கிராமத்து சுற்றி உள்ள மற்ற கிராமங்கள் ஏலத்தில் எடுக்கும் ஒரு கிரிக்கெட்  வீரராக களம் காண்பார். தன் கிராமத்தில் மக்கள் வாழும் இடத்தில் எந்தவிதமான போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் அங்கு ஒரே ஒரு இரும்பு பாதை மட்டுமே உள்ளது அங்கு வந்து போக சொல்லும் ரயில் மட்டும் உள்ளது அதுவும் நிற்காது, அதை எப்படியாவது என் மக்களுக்காக அங்கு ஒரு நிறுத்தம் வைக்கப்பட வேண்டும் என்று போராட்டம் களம் தான் இந்த பெத்தி,

கதாநாயகன் ராம்சரண் தான் இந்த கதையின் முழு பலமே முழு பொறுப்பையும் தூக்கி செல்கிறார், அவர் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று சொல்வதை விட மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார் என்று தான் பொருத்தமான சொல்லாகும், அதுவும் தன்னலமில்லாமல் பொதுநலமாக தன் கிராமத்திற்கு என்ன வேண்டும் என்று தன்னை எந்த அளவுக்கு துயரத்திலும் கஷ்டப்பட்டு அவர் செய்த வேலை மிகவும் சிறப்பு ,

ஜெகபதி பாபு, கிராம மக்களின் நலனுக்காக போராடும் மனிதராக மனதில் நிற்கிறார். சிவராஜ்குமார் தனது அனுபவம் மிக்க நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார். ஜான்வி கபூரின் கதாபாத்திரம் முதல் பாதியில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாம் பாதியில் அவருக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. பாடல்களில் சில மட்டுமே மனதில் நிற்கின்றன. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கிராமத்து சூழலையும் விளையாட்டு காட்சிகளையும் பிரம்மாண்டமாக பதிவு செய்துள்ளது.

படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளதாக என்று சொல்லலாம் காதல் நகைச்சுவை போன்ற சில காட்சிகளை சற்று குறைத்து இருக்கலாம்  இரண்டாம் பாதி முழுவதும் படத்தின் வேகத்தை கூட்டுகிறார் கதாநாயகன் ராம்சரன் அவரை துடிப்பான நடிப்பும் அவரது மக்களின் வேண்டுகோள் என்னவென்று அதை நிறைவேற்ற வேண்டும் என்ற அந்த பொறுப்பும் அதை சொல்லில் சொன்னால் அடங்காது.

இருப்பினும் உணர்ச்சிகரமான காட்சிகள், விளையாட்டு சம்பந்தமான பகுதிகள் மற்றும் ராம் சரணின் அர்ப்பணிப்பான நடிப்பு ஆகியவை இந்த குறைகளை ஓரளவு மறக்கச் செய்கின்றன. ஆனால் படத்தின் நேரத்தை சற்று குறைத்திருக்கலாம்  குறிப்பாக இறுதி அரைமணி நேரம் படத்தின் முக்கிய பலமாக அமைகிறது. நிச்சயம் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டிய ஒரு படம் தான்.

மொத்தத்தில், ‘பெத்தி’ ஒரு சமூக அக்கறை கொண்ட இளைஞன்.