full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

ஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?

2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது.

சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் சிறப்பாக வந்திருப்பதாகவும், படத்தில் கமல் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும் ஜிப்ரான் கூறியிருந்தார்.

இந்நிலையில் `விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் உருவாகி வரும் `விஸ்வரூபம்-2′ படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.