சிறப்பு வழிபாடு செய்த தீபிகா படுகோனே

சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு ‘பத்மாவதி’ என்ற பெயரில் பிரபல டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி சினிமா படம் தயாரித்துள்ளார். இதில் சித்தூர் ராணி பத்மினியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜபுத்திரசேனா, கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கடந்த டிசம்பர் 1-ந் தேதி திட்டமிட்டப்படி பத்மாவதி படம் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே பத்மாவதி படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது. […]

Continue Reading

ஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?

2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது. சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் […]

Continue Reading

நூற்றாண்டு விழாவில் வெளியாகும் 100 ரூபாய் நாணயங்கள்

அரசின் சார்பில், மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்களைக் கெளரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தபால்தலைகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன. இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த புதிய நாணயங்கள் 100 ரூபாய், 10 ரூபாய் மற்றும் […]

Continue Reading