full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

ஜெகஜால கில்லாடி விஷ்ணு!

நடிகர் விஷ்ணுவிஷால் அடுத்தடுத்து “ராட்சஸன்”, “ஜெகஜால கில்லாடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றோடு அவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு “கவரிமான் பரம்பரை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

“வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தை தொடர்ந்து இயக்குனர் எழிலும், விஷ்ணு விஷாலும் இணைந்துள்ள “ஜெகஜால கில்லாடி” படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் “கவரிமான் பரம்பரை” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விஷ்ணு விஷால்.

அறிமுக இயக்குனர் வெங்கட் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.