டெலிவரி பாய் – திரைவிமர்சனம்

cinema news movie review

டெலிவரி பாய் – திரைவிமர்சனம்

நடிகர்கள் :லியோ சிவக்குமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளிவெங்கட் போஸ் வெங்கட், மற்றும் பலர்.

இசை : சுந்தரமூர்த்தி.கே.எஸ்,

ஒளிப்பதிவு : அசோக் குமார் ராஜ், பிரசன்னா எஸ்.குமார்,

இயக்கம் :நானி,

தயாரிப்பு : அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன்.

கதாநாயகன் லியோ சிவகுமார் தான் ஒரு காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று பல முயற்சி செய்து வருகிறார். கோயம்புத்தூரில் தற்போது டெலிவரி பாய்யாக வேலை செய்து கொண்டு தன் அம்மாவையும் கவனித்து  அழகாக வாழ்ந்து  வருகிறார் , எதிர்பாராதவிதமா தன் அம்மா ஒரு விபத்து ஏற்பட்டு விடுகிறது  அதில் பலத்தும் காயம் அடைந்து கவலைக்கிடமான நிலைக்கு செல்கிறார் தன் தாய்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று 5 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது என்ற மருத்துவமனை சொல்ல  கதாநாயகன் தன்னால் முடிந்த வரை எவ்வளவு சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்து விடுகிறார் பணத்தை ஆனால் அவரிடம் எதிர்பாராத விதமா ஒரு மர்ம நபர் பறித்து சென்று விடுகிறான் பணத்திற்காக இவரும் ஒரு நபரிடமும் பணத்தை பறிக்க முயற்சிக்கிறார், தாயார் குணமடைந்ததும், தான் வாங்கிய பணத்தை எப்படியாவது உரிய நபரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் மாதந்தோறும் சென்னைக்கு வந்து அவரைத் தேடுகிறார். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போகிறது. இதற்கிடையே, தான் பணம் பெற்றுக்கொண்டு உதவி செய்த நபர் எதிர்பாராத ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். மேலும், சில மாதங்களுக்குப் பிறகு அவர் கொலைக் குற்றத்தில் சிக்கி, தவறாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் சிவக்குமார் அறிகிறார்.ஒரு காலத்தில் தனது தாயைக் காப்பாற்ற உதவிய அந்த நபரைக் காப்பாற்றுவதற்காக சிவக்குமார் எடுக்கும் முயற்சிகள்தான் படத்தின் மீதிக்கதை. அவர் அந்த நபரைப் பிரச்சினையிலிருந்து மீட்டாரா? தனது காவல்துறை அதிகாரி கனவை நனவாக்கினாரா? என்பதற்கு விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை அளிக்கிறது ‘டெலிவரி பாய்’.

சிவக்குமார் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன  உணர்வுப்பூர்வமான காட்சிகளில்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாயகியாக நடித்திருக்கும் பிரிகிடா சாகா, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார். காளி வெங்கட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்கும் வேகத்திற்கும் வலுசேர்க்கின்றன.

ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக, சண்டைக் காட்சிகள் நேர்த்தியாகவும் ரசிக்கும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் நானியின் திரைக்கதை அமைந்துள்ளது. கதையின் மையக்கருவைச் சுவாரஸ்யமாகக் கையாண்டிருப்பதுடன், ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார். குறிப்பாக, கதையின் இறுதிப் பகுதியை நோக்கி நகரும் விதமும், எதிர்பாராத திருப்பங்களும் பார்வையாளர்களைத் தொடர்ந்து படத்துடன் ஒன்றச் செய்கின்றன.

மொத்தத்தில் இந்த டெலிவரி பாய் தாய் பாசம் மற்றும்   செய்த உதவி மறவாதவன்  ஒரு படம் .