இங்கிருந்து தான் எடுத்தேன், அதனால் தான் கொடுத்தேன் : விஜய்சேதுபதி

திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம் 100 சவரன் தங்கத்திற்கான செலவை நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார். இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் பல திரைப்பட […]

Continue Reading

சிம்புவின் சரசுடு பாடல்கள் வெளியீடு

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம், இந்த மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு […]

Continue Reading

கோவில் திறப்பு விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக ரஜினி?

நடிகர் லாரன்ஸ் தனது தாய் கண்மணிக்கு கோயில் கட்டி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த கோயில் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாம். இதையடுத்து கோவிலைத் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். அதன்படி, வருகிற மே 14-ந் தேதி அன்னையர் தினத்தன்று அந்த கோவிலை திறப்பது சிறப்பாக இருக்கும் என்று நினைத்த லாரன்ஸ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம். அன்னையர் தினத்தன்று அன்னைக்கு கோயில் திறந்து உலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்பிக்க உள்ளார். இந்த கோயில் திறப்பு […]

Continue Reading

ஹாக்கிவீரர் பற்றிய படத்தைத் தயாரிக்கும் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் வருகின்றன. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையைப் படமாக எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் வருண் தவான் ஹாக்கி வீரர் […]

Continue Reading

கடவுளே வாழ்த்தியதுபோல இருக்கிறது : ராஜமௌலி பெருமிதம்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘பாகுபலி-2’ படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினியும் இந்த படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார். ‘பாகுபலி-2’ படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார். […]

Continue Reading

மே 5ல் இல்லை, 12ல்…

கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ நாயகி சாத்னா டைட்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற மே 5-ந் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பால், இந்த வாரமும் அந்த படமே […]

Continue Reading

பாகுபலி 2 படக்குழுவினருக்கு பிரபல நடிகர் பாராட்டு

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள ‘பாகுபலி–2’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்திற்கு, திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ‘பாகுபலி-2′ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், “’பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. ‘பாகுபலி-2’ படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

புதுமையான முறையில் மியூசியத்தைத் துவக்கி வைத்த கீர்த்தி சுரேஷ்!

கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகி உள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”. உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், […]

Continue Reading

தெரிந்த படம், தெரியாத தகவல்கள்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2′ உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத […]

Continue Reading

ஆர்.கே. க்கு வில்லனான சிரிப்பு நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்’ வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார். சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்ததாக ‘சிவலிங்கா’ வெளியானது. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றாலும், வடிவேலு காமெடி பேசும்படி இருந்தது. இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் […]

Continue Reading