பெண் எழுத்தாளரின் இயக்கத்தில் பிரசன்னா

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் – பிரசன்னா நடிப்பில் வெளியான `ப.பாண்டி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் பிரசன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி இருந்தது. இந்நிலையில் பிரசன்னா தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து `துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் `திருட்டு பயலே 2′, `நிபுணன்’, `இதானோ வலிய காரணம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து, தனது அடுத்த படத்தில் பிரசன்னா போலீஸ் அதிகாரியாக நடிக்க […]

Continue Reading

தனுஷின் இயக்கத்தில் அடுத்த படம் அறிவிப்பு

‘ப.பாண்டி’ படம் மூலம் தனுஷ் இயக்குனராக கால்பதித்து இருக்கிறார். அவருடைய திறமையை பிரபல இயக்குனர்களும் திரை உலகினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். “படம் இயக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதற்கு முன்பு இயக்கம் பற்றி கற்றுக் கொள்வதற்காக 17 குறும்படங்களை இயக்கினேன். படம் இயக்க முடிவு செய்த பிறகு கதை எழுதினேன். `ப.பாண்டி’ திரைக்கதையை எழுதி முடித்த பிறகு நாயகனாக நடிக்க பாண்டி கிடைக்கவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு ஒருவரை தேர்ந்து எடுப்பது கடினமாக இருந்தது. […]

Continue Reading

விஜய்யுடன் 2 படங்களில் சாய்பல்லவி?

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி தற்போது தில் ராஜு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நானி ஜோடியாக ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `காற்று […]

Continue Reading

படமாகிறது இயேசுவின் சீடர் வரலாறு

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவைச் சேர்ந்த தார்வின் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. கி.பி.52-ல் புனித தாமஸ் இந்தியா வந்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் போதனை செய்தது, கொலையுண்டது பற்றிய சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர், நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து பணி புரிகிறார்கள். இந்த படத்துக்கான முதல் கட்ட வேலைகள் […]

Continue Reading

வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை : `மாநகரம்’ சதீஷ்

நடிகர் சதீஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருக்கிறார். என்றாலும் ‘மாநகரம்’ படம் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு இவருக்கு அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. இது பற்றி சதீஷிடம் கேட்ட போது… “எனக்கு சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான். பி.பி.ஏ முடித்தேன். எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது. நான் முதலில் அறிமுகமான படம் ‘பட்டியல்’. அதில் விஷ்ணுவர்தன் சார் தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு. தொடர்ந்து […]

Continue Reading

மதுரைப் பெண்ணான அதிதி மேனனின் நம்பிக்கை

அமீர் இயக்கி வரும் படம் ‘சந்தனதேவன்’. இது ஜல்லிக்கட்டு கதை. இதில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் 2 கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அதிதிமேனன் கூறும் போது, “சந்தனதேவன்’ படத்தில் சத்யா ஜோடியாக நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் பாவாடை தாவணி கட்டாத நான் இந்த படத்தில் முழுக்க முழுக்க பாவாடை தாவணி அணிந்து நடிக்கிறேன். மதுரை பெண் போல நான் இருக்க வேண்டும் என்று […]

Continue Reading

கேரளாவில் 290 தியேட்டர்களில் வெளியாகி ‘பாகுபலி-2’ சாதனை

கேரளாவில் குறைந்த செலவிலேயே திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. மலையாளப் பட உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி போன்றோரின் படங்கள் கூட சில கோடி செலவிலேயே தயாரிக்கப்படுகிறது. மேலும் மலையாளப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் 100-க்கும் குறைவாகவே இருக்கும். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலிமுருகன்’ படம் தான் மலையாள பட உலகில் அதிக பொருட்செலவில் வெளியான சினிமா என்ற சாதனையை படைத்து இருந்தது. இந்த படமும் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் […]

Continue Reading

வெளிநாட்டு குளிர்பான சர்ச்சை: ராதிகா சரத்குமார் பதில்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பெரிய போராட்டத்தை தொடர்ந்து, வெளிநாட்டு குளிர்பானங்கள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில், ராதிகா சரத்குமார் கடந்த 2005-ஆம் ஆண்டு நடித்த வெளிநாட்டு குளிர்பான விளம்பரம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தை ராதிகாவை கிண்டல் செய்வதுபோல் எடிட் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து ராதிகா சரத்குமார் […]

Continue Reading

பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், 74 வயதான நடிகர் வினு சக்கரவர்த்தி, கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று […]

Continue Reading

பிரபல நடிகர் மறைவுக்கு ரஜினி, மோடி இரங்கல்

பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் இன்று காலை காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார். இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

Continue Reading