full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

படமாகிறது இயேசுவின் சீடர் வரலாறு

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவைச் சேர்ந்த தார்வின் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

கி.பி.52-ல் புனித தாமஸ் இந்தியா வந்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் போதனை செய்தது, கொலையுண்டது பற்றிய சம்பவங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்த படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர், நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து பணி புரிகிறார்கள். இந்த படத்துக்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.