அவதார் சாதனையை முறியடிக்கும் கூட்டணி!

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த ‘பாகுபலி-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 4 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவில் ரூ.490 கோடியும், வெளிநாடுகளில் ரூ.135 கோடியும் வசூலித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 நாட்களில் […]

Continue Reading

மீண்டும் ஒருமுறை வாகை சூடிய `வாகை சூட வா’

`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை இயக்கிய அவரது முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து, தனது அடுத்த படமாக `வாகை சூட வா’ படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் விமல் – இனியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில் வெளியான பாடல்களும் மெகா ஹிட்டானது. கல்வியறிவில்லாத அனைத்து தரப்பினருக்கும் கல்வி முக்கியம். அனைவருக்கும் […]

Continue Reading

வாழ்ந்த வீட்டை தானமாக கொடுத்த சிவகுமார்

அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற முனைப்போடு நடிகர் சூர்யாவால் கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அகரம் பவுண்டேஷன். இந்த பவுண்டேஷன் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமார் அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக தான் வாழ்ந்து வந்த வீட்டை தானமாக வழங்கியுள்ளார். சிவகுமார் ஆரம்ப காலத்திலிருந்து தி.நகர் பகுதியில் தான் வாங்கிய சொந்த வீட்டில் வசித்து வந்தார். இங்குதான் சூர்யா, கார்த்தி, பிருந்தா ஆகியோர் பிறந்து வளர்ந்தனர். […]

Continue Reading

விஸ்வரூபம் 2ம் பாகத்தின் முதல் பார்வை வெளியிட்டார் கமல்

கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியான ‘விஸ்வரூபம்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அதற்கு முன்னோட்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என […]

Continue Reading

பட்டியலில் இடம் பிடித்தாரா அமலாபால்?

அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் ரூ.100 கோடிகளை வசூலித்து 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.100 கோடிகளை வசூலித்த படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை அமலாபாலும் இடம் பிடித்துள்ளார். தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் […]

Continue Reading

பார்ட் டூ-வின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டம் இன்று மாலை […]

Continue Reading

படங்களில் நடிக்க ‘காரா’ பூஜா ரெடி

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூலில் கலக்கிய படம் ‘பிரேமம்‘. இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்து புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி. தற்போது மிகவும் பிஸியான நடிகையாக உள்ளார். மலையாள ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதற்கு […]

Continue Reading

திரையரங்குகளில் திறப்பு விழா! விரைவில்…

டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றியவர் கே.ஜி.வீரமணி. இவர், ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுது போக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கும் படம் “திறப்பு விழா”. இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாகவும், ரஹானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட்லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க […]

Continue Reading

அவர் மீதிருந்த பயம் நீங்கி விட்டது : ‘கடுகு’ சுபிக்‌ஷா

கடுகு படத்தில் நடித்த சுபிக்‌ஷா, இப்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்கிறார். இது பற்றி கூறிய அவர்… “இந்த படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாக நான் நடிக்கிறேன். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பிறகு நான் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த படம். குடும்ப பாங்கான நாயகியாக நடிக்கிறேன். இந்த படத்துக்கு ஒப்பந்தமான பிறகுதான், பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்த ‘தாரை தப்பட்டை’ படம் பார்த்தேன். அதில் அவருடைய […]

Continue Reading

உலகாயுதாவில் கெளரவிக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள்

திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர். இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் பல திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, […]

Continue Reading