ஒரு வீடு, 15 நபர்கள், 100 நாட்கள்

இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் விதிமுறையானது, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இணைந்து வசிக்க வேண்டும். போன், நாளிதழ், உள்ளிட்ட எந்த உபகரணங்களும் அங்கே இருக்காது. வெளியுலக தொடர்புகளும் இருக்காது. கமல் மட்டுமே அவர்களை அவ்வப்போது வந்து சந்திப்பார். […]

Continue Reading

ஒரு படம், இரண்டு இசையமைப்பாளர்கள்!

JVDM கிரியேஷன்ஸ் சார்பில் பாலசுதன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘துணிகரம்’. கதாநாயகனாக நடித்துள்ள வினோத் லோஹிதாசன் உட்பட முற்றிலும் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இயக்குனர் பாலசுதனும் கதைக்கு திருப்பமான முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் இசைக்கு ஷான் கோகுல் மற்றும் பின்னணி இசைக்கு தனுஜ் மேனன் என இரண்டு இசையமைப்பளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு […]

Continue Reading

எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும் ஆற்றல் அந்த மொழிக்கு இருக்கிறது : வைரமுத்து

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினை பெற்றார். மோகன்லால், ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின், தயாரிப்பாளர் தனஞ்செயன், இந்தியில் சோனம் கபூர், அக்‌ஷய் குமார் […]

Continue Reading

தனுஷின் ஹாலிவுட் படம் தொடக்கம்

தனுஷ் நடிப்பதற்கு கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இருப்பினும் ‘ப.பாண்டி’ என்ற படத்தை இயக்கி, அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில், அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். வேலையில்லா பட்டதாரி-2 பாகத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆயத்தமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 14-ந் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து ரோம், பாரீஸ் என பல நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இப்படத்தின் […]

Continue Reading

வாள்வீச்சில் வல்லவராக ஸ்ருதி!

அழகும், நடிப்புத்திறனும் ஒருங்கே பெற்ற நடிகை ஸ்ருதிஹாசன், பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார். இதுகுறித்து படக்குழுவினர் கூறியதாவது, “வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்வதாகவும், அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைப்பயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்.” என்றனர். பயிற்சியின் முதல் […]

Continue Reading

விவசாயிகள் மீது பட்ட கிரகணப் பார்வை!

பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், […]

Continue Reading

இளன் படத்தின் இசை வெளியீடு

பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், […]

Continue Reading

கதை, திரைக்கதை, வசனம் – விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்து, அதில் பயணம் செய்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான படங்களில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என தேர்வு செய்து நடிக்கும் இவரை “மக்கள் செல்வன்” என்றும் அழைக்கின்றனர். சீனு ராமாசாமி இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். […]

Continue Reading

விருதுகளை வென்ற கலைஞர்கள்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினைப் பெற்றார். தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு படமான […]

Continue Reading

விக்ரமின் `சாமி-2′ படத்தில் இரண்டு கதாநாயகிகள்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் `சாமி’ படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2′ விலும் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். மேலும் ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் அதன் இரண்டாவது […]

Continue Reading