full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

உலகாயுதாவில் கெளரவிக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள்

திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் பொருட்டு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு சார்பாக தமிழ் சினிமாவில் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்திருந்தனர்.

இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் பல திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும், மூத்த பத்திரிக்கையாளர்கள் கலைப்பூங்கா திரு. ராவணன், திரு. தேவி மணி, திரு. மாலி, திரு. நெல்லை பாரதி ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்தார்கள்.