புதிய படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் பரத்

லீப்பிங் ஹார்ஸ், இன்க்ரெடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீஸனில் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் […]

Continue Reading

பிரதமர் மோடியைச் சாடிய பிரகாஷ்ராஜ்

கடந்த மாதம் 5-ந்தேதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார். இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார். கெளரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் இந்த […]

Continue Reading

குறள் 388-ன் கருத்தைச் சொல்லும் படம்

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. இவர் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகனாவார். இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் “குறள் 388”. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் “வோட்டர்” என்றும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார். சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர் பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், எல் […]

Continue Reading

நடிப்பிலும், அரசியலிலும் சிவாஜி சொல்லிக்கொடுத்த பாடம் : ரஜினிகாந்த்

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான நேற்று அவருடைய மணிமண்டபம் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஓ.பி.எஸ். மிகவும் அதிர்ஷ்டசாலி. அது பல முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. […]

Continue Reading

அவரது ரசிகர்களில் ஒருவனாக வந்திருக்கிறேன் : கமல்ஹாசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. நடிகர் சிவாஜி […]

Continue Reading

மீண்டும் காந்தி ஜெயந்தியில் களமிறங்கும் கோ-வி-சி கூட்டணி

நான்கு வருடங்களுக்கு முன்பு, காந்தி ஜெயந்தி (அக். 2) அன்று கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான காமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார் மூஞ்சி குமார்’ ஆக பட்டிதொட்டியெங்கும் பரவலாகப் பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி. இப்போது மீண்டும் அதே தேதியில் தங்களது அடுத்த படமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் கூட்டணி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் […]

Continue Reading

ராக்கி சாவந்த் தயாரிக்கும் சாமியார் படம்

அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பிரபலமான தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் ஆசிரமத்துக்கு வந்த பெண்களைக் கற்பழித்ததாக, 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்மீத் ராம் ரகீம் சிங் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர். குர்மீத் ராம் ரகீம் சிங் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங். கலவரத்தைத் தூண்டியதில் தொடர்பு இருப்பதாக அவரையும் போலீசார் விசாரணை […]

Continue Reading

காஜலாக மாறிய சாய்பல்லவி

தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற `மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் `மாரி-2 படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. `மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை […]

Continue Reading

டி ஆர் பேச்சால் கலங்கிய தன்ஷிகா

மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக தன்ஷிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலை எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் தன்ஷிகா […]

Continue Reading

ராஜமெளலி இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ !!

‘பாகுபலி-2’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. ராஜமெளலியின் அடுத்த படம் பற்றி எந்தவிதத் தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், அடுத்ததாக ராஜமெளலி இயக்கவிருக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ‘ஸ்பைடர்’ படம் வெளியாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு ‘பாரத் அனேநானு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலம் […]

Continue Reading