2வது முறையாக கலகலப்பு செய்ய வரும் சிவா

`சங்கமித்ரா’ பிரமாண்ட படத்திற்கு முன்பாக `கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளார். `கலகலப்பு-2′ படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதை முன்னதாகப் பார்த்திருந்தோம். இந்நிலையில், முதல் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மிர்ச்சி சிவா `கலகலப்பு 2′ படத்திலும் நடிக்க இருக்கிறார் . சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கும் `கலகலப்பு-2′ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது. […]

Continue Reading

அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் கமல் சந்திப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசம் வெளிப்பட்டது முதலே நடிகர் கமல்ஹாசன் தனது பங்கிற்கு அமைச்சர்கள், ஊழல், நீட், டெங்கு, காந்தி குல்லா என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், அரசியல் குறித்தும் ஊழல் பற்றியும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் தீவிர அரசியலில் விரைவில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சராகி தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஆசை என்றும் அறிவித்திருந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, […]

Continue Reading

பிரம்மாண்ட திரையரங்கில் தடம் பதிக்கும் விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் படம் `மெர்சல்’. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் மெர்சல் படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், […]

Continue Reading

உறுதி கொண்ட ஜூட் லினிகர்

ஆர் அய்யனார் இயக்கத்தில், ஏ.பி.கே. பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுதி கொள்’. இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – பாண்டி அருணாசலம், இசை – ஜூட் லினிகர், எடிட்டிங் – எம்.ஜேபி, பாடல்கள் – மணிஅமுதன், ஸ்டண்ட் – […]

Continue Reading

ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார் : லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பில் போருக்கு தயாராகுங்கள் என்று அவர் நிகழ்த்திய பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அவரின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அது குறித்த விமர்சனங்களும், விவாதங்களும் தொடர்ந்து வந்தது. அதன் பிறகு அமைதி காத்து வந்த ரஜினி, சமீபத்தில் நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நிகழ்ச்சியில் பேசினார். அந்த பேச்சும் விவாதப் பொருளாக மாறி, தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது புறம் இருக்க, லதா ரஜினிகாந்த் சமீபகாலமாக […]

Continue Reading

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிறு) மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள், மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளும் என பலரும் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச் […]

Continue Reading

ஜாமீன் பெற்ற நடிகர் திலீப்

பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். அலுவா கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள், கொச்சி ஐகோர்ட்டில் 2 தடவையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு தடவையும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அங்கமாலி கோர்ட்டில் நடிகர் திலீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், திலீப்பை ஜாமீனில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று […]

Continue Reading

ஆச்சர்யங்கள் நிறைந்த களத்தூர் கிராமம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று. இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் […]

Continue Reading

காவியன் படக்காட்சியைக் காப்பியடித்த கொலையாளி?

ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’. நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளனர். ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்த்தசாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சபரீஷ் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது […]

Continue Reading

தீபாவளிக்கு இசை மட்டும் தான்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டி.இமான் […]

Continue Reading