ஐகோர்ட் உத்தரவால் உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள மெர்சல் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று வெளியான இப்படத்தின் டீசர் சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்தது. மெர்சலுக்காக ட்விட்டரில் எமோஜி பெற்றது, இப்படத்தின் தலைப்புக்கு டிரேட் மார்க் வாங்கியது உள்ளிட்டவை, தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் செய்திடாத ஒன்று. முதன்முதலாக அந்தப் […]

Continue Reading

களமிறங்கிய நிதின் சத்யாவுடன் கைகோர்த்த ஜெய்

`சென்னை 600028′ படத்தில் நண்பர்களாக வரும் ஜெய், நிதின் சத்யா ஒரு படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர். பல படங்களில் நடிகராக பார்க்கப்பட்ட நிதின் சத்யா, இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வரும் அந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை நிதின் சத்யாவின் […]

Continue Reading

ஹர ஹர மகாதேவகி வரிசையில் ஜெயிக்கிற குதிர

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ஜெயிக்கிறகுதிர” இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்‌ஷி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன் பாப், யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். […]

Continue Reading

கிரிக்கெட் வீரரின் ரசிகராக விக்ரம்பிரபு

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனத் தயாரிப்பாளர் டி சிவகுமார், அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “பக்கா”. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி சிவகுமார் நடிக்கிறார். இப்படத்திற்கு […]

Continue Reading

3டியில் நாளை ரஜினியின் 2.0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து […]

Continue Reading

மாலை சூடப்போகும் மகிழ்ச்சியில் சமந்தா – நாகசைதன்யா

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக இருந்தனர். இதையடுத்து, இரு குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணத்தை கோவாவில் நடத்துவது என்றும், அதில் இரண்டு குடும்பத்தினர் மட்டும் பங்கேற்பது என்றும் முடிவு […]

Continue Reading

சோலோ அனுபவங்களைப் பகிர்ந்த துல்கர்

மலையாளம், இந்தி, தமிழில் விக்ரம் – ஜீவா நடித்த ‘டேவிட்’ உள்பட பல படங்களை இயக்கியவர் பிஜோய் நம்பியார். இப்போது, இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான் தமிழ், மலையாளத்தில் நேரடியாக நடித்திருக்கும் படம் ‘சோலோ’. இதை தெலுங்கு, இந்தியிலும் ‘டப்’ செய்து வெளியிடுகிறார்கள். இதில் துல்கர் சல்மான் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக தன்ஷிகா, சுருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், நேகாசர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது […]

Continue Reading

குற்றாலத்தில் எடுக்கப்பட்ட உதயநிதியின் புதிய படம்

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தை அடுத்து உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். இப்படத்தில் உதயநிதியுடன் இயக்குனர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி […]

Continue Reading

வாட்ஸ்-அப்பில் வைரலாகும் த்ரிஷாவின் குறும்படம்

தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை த்ரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். கேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை த்ரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் த்ரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. […]

Continue Reading

நயன்தாராவின் பார்வையில் ரஜினியும், அஜித்தும்

தமிழ்த் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்…. ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது நான் பெரிய நடிகை அல்ல. சாதாரண நடிகை என்றாலும், அஜித் என்ற பெரிய ஸ்டாருடன் […]

Continue Reading