காட்டேரியில் கதாநாயகனாகும் பிரபல நடிகரின் மகன்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த தொடக்கவிழாவில் […]

Continue Reading

விஜய்சேதுபதியின் வளர்ச்சிக்கு ஒரு அடையாளம்

‘விக்ரம் வேதா’விற்குப் பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாகத் திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா’ படத்தினை படப்பிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது குறித்து படக்குழுவினர் பேசும் போது, ‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெய்னர் படமான ‘ஜுங்கா’வின் முதற்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி […]

Continue Reading

தாறுமாறா பாட்டு வெளியிட்ட சிவகார்த்திகேயன்

விதிமதி உல்டா படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார். இந்த பாடல் உலகம் முழுவதும் ஒலித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி […]

Continue Reading

எதிர்பார்ப்பை கிளப்பும் ஓவியாவின் பேய்ப் படங்கள்

டிகே இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `யாமிருக்க பயமே’. த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார். காமெடி கலந்த பேய்ப் படமாக உருவாக இருக்கும் […]

Continue Reading

தெலுங்கு பேசும் குரங்கு பொம்மை

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கத்தில் சுவாரஸ்யமான திரைக்கதையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’குரங்கு பொம்மை’. இப்படத்தில் நாயகனாக விதார்த்தும், நாயகியாக டெல்னா டேவிஸூம் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பால் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் […]

Continue Reading

படு பயங்கர ஹாரர் படமாக பொட்டு

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு” இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமையா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு வசனம் – செந்தில், ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை – அம்ரீஷ், பாடல்கள் […]

Continue Reading

டோக்கியோ செல்லும் விக்ரம் வேதா

  வொய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், விக்ரமாதித்தன் – வேதாளம் கதையை கருவாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படம் டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வொய் நாட் ஸ்டுடியோஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் […]

Continue Reading

நரிவேட்டை விழாவில் கர்ஜித்த ட்ராபிக் ராமசாமி

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அந்த பெண்ணின் நிலை […]

Continue Reading

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கும் ரம்யா நம்பீசன்

விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திரப் படத்தில் நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி கூறிய ரம்யா நம்பீசன், “தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பிருந்தே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகு தான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன். ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப் பற்றி […]

Continue Reading

சென்சார் பெண் அதிகாரிகளும் பார்த்து ரசித்த ஹர ஹர மஹாதேவகி

ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அளித்த பேட்டியில் ” ஹர ஹர மகாதேவகி திரைப்படத்தை வரும் செப்டம்பர்-29ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். “ஏ” சான்று பெற்றப் படம். எனவே குடும்பத்தோடு பார்ப்பது அவரவர் விருப்பம். புதுமையான ஒன்றை இப்படத்தில் முயற்சித்துள்ளோம். முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வது […]

Continue Reading