பரத்துக்கு ‘காதல்’ போல, பிருத்விக்கு ‘தொட்ரா’

ஜே எஸ் அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’​.​ இந்தப்படத்தை இயக்குனர் கே பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது ​இயக்கத்தில்​ தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். சரவணக்குமார் […]

Continue Reading

கமலுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காக தான். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நான் கவலைப்பட்டதில்லை. அரசியல் என்பது காமெடியான வி‌ஷயம் அல்ல. அது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் மிகப்பெரிய அடித்தளம். […]

Continue Reading

மெர்சலுக்கு ஆதரவாக தணிக்கைக் குழுவை வறுத்தெடுத்தத் தயாரிப்பாளர்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள மெர்சலுக்கு ஆதரவாக விலங்குகள் நல வாரியத்தையும், தணிக்கைக் குழுவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய சுரேஷ் காமாட்சி. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது, “மெர்சலாக வெளியாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களால் குதறப்பட்டு வெளியாகவிருக்கிறது. மத்தியில் விலங்குகள் நல வாரியம், இங்குள்ள அவர்களின் ஆட்சியும் இணைந்து இளைய தளபதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த உலகத்தின் செதுக்கலே மனிதனுக்கு விலங்கும், விலங்குகளுக்கு […]

Continue Reading

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை  உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் […]

Continue Reading

முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய மெர்சல்!

சென்னையில் மட்டுமே முதல் நாள் வசூலில் கெத்து காட்டியிருக்கிறது மெர்சல். மிகவும் பரபரப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் வெளியான பிரம்மாண்ட மெர்சல் படம் சென்னையில் மட்டுமே முதல் நாளில் ரூ 1.52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கபாலி மற்றும் விவேகத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம். விவேகம் படம் முதல் நாளில் சென்னையில் ரூ 1.21 கோடி வசூலையும் கபாலி படம் ரூ 1.12 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் ஐனாக்ஸ் […]

Continue Reading

மெர்சலுக்காக பாடல் வெளியிட்ட விசிறி படக்குழு!

“மெர்சல்” படத்தை இனிதே வரவேற்கிறது “விசிறி” படக்குழு.   தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல். ஆம்! தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்… “எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது. இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி”  ரசிர்களின்  மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி”   “J Sa Productions” மூலமாக A.ஜமால் […]

Continue Reading

தளபதியை வளர்த்தெடுக்கும் பிரச்சனைகள்!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கிற நடிகர் விஜயின் படங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இருக்கிறத் ”தீராதக் காதல்” தொடர்ந்து கொண்டே இருக்கிறது “மெர்சல்” வரை..நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜயின் படங்கள் பிரச்சனைகளை சந்திப்பதென்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது, எப்படியெனில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டால் பலர் ஆச்சர்யப்பட்டு பேசுமளவிற்கு ஆகிவிட்டது… “படம் எடுப்பதில் இருக்கிற சிரமத்தை விட அதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவிட வேண்டும் என்பதே பெரிய சிரமமான ஒன்றாக இருக்கிறது” என்று விஜயையே பேச வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்…அழகிய […]

Continue Reading

மான் விருந்து வைக்கும் சிங்கம்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான “ஸ்டோன் பெஞ்ச்” மற்றும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மேயாத மான்”. வைபவ் மற்றும் விஜய் டிவி புகழ் ப்ரியா பவானி ஷங்கர் முன்னணி கதாபத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார். தீபாவளி ரிலீசுக்குத் தயார் நிலையில் இருக்கும் படத்தின் டிரைலரை, இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்று அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே, சந்தோஷ் நாரயணனின் இசையில் பாடல்கள் […]

Continue Reading

சிம்புவுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் விவேக்!

விடிவி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விவேக், சந்தானம் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு “ தங்களுக்குப் பிடித்தவர்கள் பெயர் சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால், யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு” […]

Continue Reading

அட்லி சொன்ன மெர்சல் ரகசியங்கள்

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து அட்லி பேசும் போது, “அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனையை ‘மெர்சல்’ படத்தில் தொட்டு இருக்கிறோம். மதுரையை சேர்ந்த தளபதி என்ற பாத்திரத்தில் அப்பா விஜய் ரகளையாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நித்யாமேனன் நடிக்கிறார். இன்னொரு விஜய் மேஜிக் செய்பவர். இந்த வேடத்துக்காக மேஜிக் கற்றார். இந்த படத்தில் அப்பா, […]

Continue Reading