full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

சிம்புவுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் விவேக்!

விடிவி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் விவேக், சந்தானம் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு “ தங்களுக்குப் பிடித்தவர்கள் பெயர் சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால், யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு” என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் அவர் பேசும் போது, இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குறியது என்றும், சிம்பு மிகச்சிறந்த திறமைசாலி என்றும் பாராட்டினார். அதோடு மட்டுமில்லாமல், ”சிம்பு தொட வேண்டிய உயரம் இன்னும் இருக்கிறது என்றும், தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்துவதை விடுத்து சிம்பு முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

முக்கியமாக, சினிமா மிகவும் மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும், பல விதமான சிக்கல்களைக் கடந்தே ஒரு சினிமா வெற்றிபெற வேண்டியிருக்கிறது என்று கூறியவர், ”இதைவிட மோசமான ஒரு  வியாபாரம் இல்லையோ என்னும் அளவிற்கு சினிமா இருப்பதாகவும்” வருத்தம் தெரிவித்தார்.

விழாவில் நடிகர் ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.