full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய மெர்சல்!

சென்னையில் மட்டுமே முதல் நாள் வசூலில் கெத்து காட்டியிருக்கிறது மெர்சல். மிகவும் பரபரப்பாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் வெளியான பிரம்மாண்ட மெர்சல் படம் சென்னையில் மட்டுமே முதல் நாளில் ரூ 1.52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது கபாலி மற்றும் விவேகத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம். விவேகம் படம் முதல் நாளில் சென்னையில் ரூ 1.21 கோடி வசூலையும் கபாலி படம் ரூ 1.12 கோடி வசூல் செய்திருந்தது.

மேலும் ஐனாக்ஸ் மற்றும் பிவிஆர் திரையரங்குகளில் மெர்சல் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.