ஔரங்கசீப் கோட்டையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மேலும் `மோகினி’, `கர்ஜனை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ள த்ரிஷா, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `1818′ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்திலும், […]

Continue Reading

வலைதள வாசிகள் ஜாக்கிரதை!

சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு எந்தளவிற்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு தவறான தகவல்களும் தீ போல பரப்பப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை மன்னன் கவுண்டமணி இறந்துவிட்டதாக தவறான செய்தி பரப்பப்பட்டு, அதற்கு கவுண்டமணியே மறுப்பு தெரிவித்த பிறகு தான் அது அடங்கியது. அதேபோலத் தான்இப்போது பின்னணி பாடகி சுசீலாவிற்கும் நடந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படகா மற்றும் இங்கலீஷ் உள்ளிட்ட பல […]

Continue Reading

கார்த்திக்கு வடமாநிலங்களில் பிரச்சனை

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை `சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கிறார். இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் நேற்று வெளியாகி இருக்கின்றன. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக […]

Continue Reading

சீமத்துரைக்கு காதல் வந்தால்?

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம். அப்படி […]

Continue Reading

கன்னட குயினுக்கு கால்ஷீட் இல்லை : எமி

தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தைத் தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது எமி ஜாக்சன், ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ‘சூப்பர் கேர்ள்ஸ்’ என்ற ஹாலிவுட் டிவி ஷோவில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இது தவிர […]

Continue Reading

தம்பி ராமையாவின் உலகம் விலைக்கு வருது

மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களைத் தொடர்ந்து தம்பி ராமையா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தம்பி ராமையாவின் மகனான உமாபதி அறிமுகமான `அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், உமாபதியை வைத்து தானே படம் ஒன்றை இயக்க தம்பி ராமையா முடிவு செய்து அதற்கு `உலகம் விலைக்கு வருது’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார். மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், விவேக் பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், […]

Continue Reading

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Continue Reading

அனுதாபமும், நிதியுதவியும் போதாது : கமல்

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணிநேரமாக பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

Continue Reading

அமலாபாலின் இன்ஸ்டாகிராம் பதிவு

பிரபல நடிகை அமலாபால் ஒன்றரை கோடிக்கு வாங்கிய காரை புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் உத்தரவிட்டிருந்தார். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்திருந்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அந்நிலையில் அமலாபாலின் கார் சட்டப்படி தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் வரி ஏய்ப்பு […]

Continue Reading

“விக்ரம் வேதா” தந்த வாய்ப்பு!

“தனதனனா.. தனதனனா” என தெறிக்கவிடும் விஜய் சேதுபதியின் தீம் மியூசிக்காகட்டும், “யாஞ்சி யாஞ்சி” என குழையவைக்கும் மாதவனின் ரொமான்ஸாகட்டும் “விக்ரம் வேதா” படத்தில் ரசிகர்களை அசரவைத்தவர் இளம் இசையமைப்பாளர் சாம் சி எஸ். விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது வந்திருக்கும் செய்தி சாமின் இளம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மெர்சல் வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் மூன்றாம் முறையாக இணையும் “தளபதி62” படத்திற்கு […]

Continue Reading