full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

வலைதள வாசிகள் ஜாக்கிரதை!

சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு எந்தளவிற்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு தவறான தகவல்களும் தீ போல பரப்பப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை மன்னன் கவுண்டமணி இறந்துவிட்டதாக தவறான செய்தி பரப்பப்பட்டு, அதற்கு கவுண்டமணியே மறுப்பு தெரிவித்த பிறகு தான் அது அடங்கியது.

அதேபோலத் தான்இப்போது பின்னணி பாடகி சுசீலாவிற்கும் நடந்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படகா மற்றும் இங்கலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளவர் பின்னணிப் பாடகி P.சுசீலா இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் யாரோ சில விஷமிகள் தவறான தகவலைக் கசியவிட்டனர். தீயாய்ப் பரவிய இந்த செய்தி குறித்து அறிந்த பலரும் சுசீலாவிற்குத் தொடர்புகொண்டு பேச, இப்போது இதுகுறித்து பி.சுசீலாவே விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்த வதந்தி குறித்து டுவிட்டரில் கூறியுள்ள அவர் “நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

பி.சுசீலா கடந்த ஒரு மாத காலமாக டெலசோ மாகாணத்தில் இருந்து வருகிறார். 2 நாட்களில் சென்னை திரும்புவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்றத் தகவல்கள் வரும் போது, அந்தத் தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பகிர்வது அனைவருக்கும் நல்லது.