உயிர் பிழைத்த பிரியங்கா சோப்ரா!

உலகின் நாட்டாமையாக விளங்கும் அமெரிக்காவில் சமீபமாக அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த முறை நியூயார்க் பகுதியில் உள்ள மன்ஹட்டன் பகுதியில் படுபயங்கரமான தீவிரவாத தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் பள்ளி வாகனம் ஒன்றின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை விட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் பத்திற்கும் மெற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளது. தாக்குதல் நடந்த மன்ஹட்டன் பகுதியில் தான் […]

Continue Reading

ரசிகர்களின் கேள்விக்கு நஸ்ரியாவின் ‘நச்’ பதில்

தமிழில், நேரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகையான நஸ்ரியா. முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், ராஜா ராணி, திருமணம் எனும் நிஹ்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்தார்கள். அப்போதும் நஸ்ரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. […]

Continue Reading

வசூல் மன்னனான வில்லன்

மோகன்லால் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வில்லன்’. அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் மோகன் லால் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாகுபலி -2 மற்றும் புலிமுருகன் திரைப்படத்துக்கு பின் மோகன் லால் மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்துள்ள வில்லன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. […]

Continue Reading

பா.இரஞ்சித்தின் அடுத்த முயற்சி!

இயக்குனர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் […]

Continue Reading

மெளனம் காக்கும் ரகுல் ப்ரீத்?

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது. கார்த்தியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் பிட்சர்ஸ் சார்பில் […]

Continue Reading

மீண்டும் இணையும் காக்கா முட்டை கூட்டணி!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக கோலோச்சிக் கொண்டிருக்கும் போதே கதாநாயகனாகவும் நடித்தவர்கள் நாகேஷ், கவுண்டமணி, விவேக், வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோர். அந்த வரிசையில் இப்போது காமெடியன்களாக நடித்துவரும் யோகிபாபுவும், ரமேஷ் திலக்கும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்கள். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நட்டு தேவ் இயக்கவிருக்கும் படத்திற்கு ரமேஷ் திலக்கும், யோகி பாபுவும் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். “சத்திய சோதனை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் […]

Continue Reading

நவம்பர் 3-ல் தற்கொலைகளுக்கான தீர்வு

K3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் சீனிவாசப்பா தயாரித்துள்ள படம் திட்டிவாசல். தமிழகத்தில் நடந்த தற்கொலைகளை பிரதிபலிக்கும் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் பிரதாப் முரளி இயக்கியுள்ளார். நாசர், மாஸ்டர் மகேந்திரன், தீரஜ், ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியைத் தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்குண்டான நீதியும் […]

Continue Reading

ஆறு அத்தியாயத்தில் அரசை கலாய்த்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 6 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கியுள்ள “6 அத்தியாயம்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. ஹாலிவுட், பாலிவுட் சினிமாவில் மட்டுமே செய்யப்பட்டு வந்த “அந்தாலஜி” பாணியிலான திரைப்படத்தை 6 வெவ்வேறு குழுக்களை வைத்து ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா […]

Continue Reading

பிக்பாஸ் ஜூலிக்கு அடித்த பம்பர் லக்!

மெரீனா ஜல்லிக்கட்டு போராட்டங்களின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலானவர் ஜூலியானா. அந்த ஒற்றை அறிமுகத்தைக் கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களோடு பிரபலமாக அந்த போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஜூலி, அந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தகட்ட வேலைகளில் பிஸியானார். ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவியில் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டணி!

வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் […]

Continue Reading