தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போகுமா? கலக்கத்தில் தல-தளபதி ரசிகர்கள்!

மார்ச் 2-ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த போது, பலரும் இது வழக்கமான ஒன்றுதான் இரண்டொரு நாளில் வாபஸ் ஆகி விடும் என்றே நினைத்தார்கள். ஆனால் இந்த முறை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பின்வாங்கப் போவதில்லை என்கிற முடிவோடு தயாரிப்பாளர் சங்கம் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. படங்கள் மட்டுமல்ல, சினிமா சம்பந்தமாக எந்த விழாவும் நடக்காது என அறிவித்ததோடு மட்டுமல்லாமல், போஸ்டர் கூட ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட அத்தனையையும் அப்படியே கடைபிடித்து […]

Continue Reading

லிப்ராவின் புது முயற்சி

பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசை பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது மாறுபடுகிறது.. ஆம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கனவுகளை கொட்டி இசை ஆல்பமாக பாடல்களை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து உரிய தொகையை கொடுத்து அதன் உரிமையை வாங்கி அவற்றை மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்ப […]

Continue Reading

காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’..!

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்.. தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது […]

Continue Reading

சத்யராஜுக்கு பெருமை சேர்த்த கட்டப்பா!

“அமைதிப்படை” அமாவாசைக்குப் பிறகு நடிகர் சத்யராஜுக்கு அளவற்ற புகழும் பேரும் பெற்றுத் தந்தது “பாகுபலி” கட்டப்பா கேரக்டர் தான். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த “பாகுபலி” படத்தில் சத்யராஜின் வேடம் நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் நடிகர் சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு […]

Continue Reading

விலகிக் கொண்ட தேனாண்டாள்.. கைகொடுத்த பிரபுதேவா!

இயக்குநர் ராஜேஷ் படங்கள் என்றாலே இரண்டாவது ஹீரோ சந்தானமாகத் தான் இருப்பார். இப்போது காமெடியனாக இல்லாமல் ஹீரோவாகவே நடிக்கும் சந்தானத்தை இயக்கும் போது கேட்கவா வேண்டும்??   ரசிகர்கள் எல்லோரும் இந்தக் கலக்கல் காம்பினேஷனுக்காக காத்திருந்த வேளையில் என்ன காரணமோ, இந்தப் படத்தைத் தயாரிப்பதாய் இருந்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கழண்டு கொண்டிருக்கிறது.   எப்படியோ இந்த விவரம் அறிந்த நடிகர் பிரபு தேவா, தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான “பிரபுதேவா ஸ்டுடியோஸ்” மூலம் இப்படத்தை […]

Continue Reading

கண்டும் காணாமல் போகும் ராதிகா ஆப்தே!

கபாலி படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. சமூக வலைதளங்களில் அடிக்கடி இவர் குறித்த சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்.   சமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.   இதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, ‘பீச்சில் பிகினி அணியாமல் […]

Continue Reading

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்பாரா ஹன்சிகா?

தமிழ் திரைப்பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. முன்னணி நாயகர்களுடன் நடித்த படங்களில் ஹன்சிகாவின் சிரிப்பும், உடல் அமைப்பும் ரசிகர்களை கவர்ந்தது. கை நிறைய படங்களை வைத்திருந்த ஹன்சிகாவுக்கு, தற்போது முன்பு போல் படங்கள் இல்லை. இந்த நிலையில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஓரளவு எடையை குறைத்த ஹன்சிகா, அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். அப்போதே அந்த படத்தை பார்த்த ரசிகர்கள், இனி உடல் எடையை குறைக்க […]

Continue Reading

ஸ்ரீதேவிக்கு சென்னையில் நாளை அஞ்சலி

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, போனி கபூர் சில ஊர்களில் […]

Continue Reading

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.   இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. […]

Continue Reading

ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் எடுப்பேன் – இயக்குநர் க.ராஜீவ் காந்தி!

பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் […]

Continue Reading