full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

சத்யராஜுக்கு பெருமை சேர்த்த கட்டப்பா!

“அமைதிப்படை” அமாவாசைக்குப் பிறகு நடிகர் சத்யராஜுக்கு அளவற்ற புகழும் பேரும் பெற்றுத் தந்தது “பாகுபலி” கட்டப்பா கேரக்டர் தான்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளிவந்த “பாகுபலி” படத்தில் சத்யராஜின் வேடம் நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இதுநாள் வரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் நடிகர் சத்யராஜுக்கு கிடைத்திருக்கிறது. லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியம், சத்யராஜின் கட்டப்பா போன்ற மெழுகு சிலையை வைத்து கவுரவப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக தெலுங்கு நடிகர் பிரபாஸூக்கு பாகுபலி தோற்றத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டது. லண்டனின் மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் தமிழ் நடிகர் ஒருவரின் மெழுகுச்சிலை இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.