பிரபல தமிழ் நடிகர் கொரோனவால் மரணம்!!!

  கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார். இவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.         கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

Continue Reading

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா!!!

தமிழ் சினிமாவில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதிராஜா, […]

Continue Reading

ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வரும் நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கருத்து

நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற […]

Continue Reading

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று

கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்த திரைப்படம் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்த திரைப்படத்தில் அமலாபாலின் கணவராக பிரபல பாலிவுட் நடிகர் அஃப்தாப் என்பவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததை அடுத்து கொரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டதாகவும் […]

Continue Reading

மருத்துவ பரிசோதனை: சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயன்ற ராகினி திவேதி

போதைப்பொருள் மருத்துவ பரிசோதனையின் போது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை ராகினி திவேதி போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.போலீஸ் […]

Continue Reading

வடிவேல் பாலாஜி மறைவுக்கு இரங்கல் தெரிவுத்துள்ள கார்த்தி, தனுஷ்

வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவுத்துள்ளனர். நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது கை, கால்களும் செயல் இழந்தன. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி வடிவேல் […]

Continue Reading

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஐகோர்ட்டு

வெளிநாட்டு செல்போன் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். இங்கிலாந்தின் லிப்ரா என்ற செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. அந்நிறுவனத்திற்கு இசையமைத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர்.ரகுமான் மீது வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை […]

Continue Reading

சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் வடிவேலு பாலாஜி கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கூடவே கை, கால் செயலிழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சைக்காக சென்னை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் பின்னர் அவரை விஜயா மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 45. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]

Continue Reading

திரையிட படம் தராவிட்டால், தியேட்டர்களைதிருமண மண்டபமாக மாற்றுவோம் – திரையரங்கு உரிமையாளர்கள் பதிலடி

திரையிட படம் தராவிட்டால், தியேட்டர்களை திருமண மண்டபமாக மாற்றுவோம் என்று பட அதிபர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலர் தியேட்டர் அதிபர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வி.பி.எப் கட்டணம் ரத்து, விளம்பர வருவாய், டிக்கெட் முன்பதிவில் பங்கு உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் புதிய படங்களை திரையிட தரமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்று கூறியிருந்தனர். இந்த கடிதத்துக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பதிலில் படங்களை […]

Continue Reading

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட பிரபல டி.வி. நடிகை

பிரபல டி.வி. நடிகை தற்கொலை செய்துகொண்டார். பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவனி. இவர் மனசு மமதா, மவுனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்த அவர் வீட்டில் திடீரென்று தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அலறிய பெற்றோர் ஸ்ராவனியை மீட்டு மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துபோனார். ஸ்ராவனியும் காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் ரெட்டி என்பவரும் டிக்டாக் மூலம் அறிமுகமாகி நெருக்கமாக […]

Continue Reading