இளம் நடிகர் திடீர் மரணம்

மலையாள டி.வி சேனல்களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் சபரிநாத். இவர் அமலா, மின்னுக்கேட்டு, சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது சபரிநாத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 43 வயதே ஆன நடிகர் சபரிநாத்துக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் […]

Continue Reading

‘எவனென்று நினைத்தாய்’ கூட்டணியில் இணையும் விஜய்சேதுபதி?

மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மாஸ்டர் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் 232-வது படமான ‘எவனென்று நினைத்தாய்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் […]

Continue Reading

போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் யார் என்று சொல்ல தயார் – ஸ்ரீ ரெட்டி

திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் […]

Continue Reading

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்

மோடியைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவது நாட்டுமக்கள் செய்த அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 70 வது பிறந்த நாளை இன்று வியாழக்கிழமை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக செப்டம்பர் 14 முதல் 20 வரை சேவா சப்தாவை ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளைசெய்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் பாலிவுட் நடிகை […]

Continue Reading

விஜய் நடித்த வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு சிவன் மரணம்

விஜய் நடிப்பில் வெளியான படம் வேட்டைக்காரன். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். மேலும் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார். திடீர் உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு […]

Continue Reading

புதிய சிக்கலில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் ஒரு பாடலில், சாதி பிரச்சினையை தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சூரரைப்போற்று படத்தில் வரும் “மண் உருண்ட மேல… மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? […]

Continue Reading

கணவன் வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சீரியல் நடிகைகளுக்கும் இவர் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலித்து வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்துள்ளனர். அப்போது […]

Continue Reading

ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாந்த பிரபல இசையமைப்பாளர்

கோலிவுட்டில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர். இவர் ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கைதி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு தனது இசையால் வலுசேர்த்துள்ளார். இந்நிலையில், ஆன்லைனில் பொருள் வாங்கி தான் ஏமாந்தது குறித்த அதிர்ச்சி தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் சாம்.சி.எஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என்னுடைய […]

Continue Reading

சினிமா சூட்டிங்கின் போது விபத்து….வெள்ளத்தில் மூழ்கி உயிர் தப்பிய ஜாக்கி சான்

சினிமா சூட்டிங்கின் போது வெள்ளத்தில் மூழ்கி ஜாக்கி சான் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டார். 66 வயதாகும் ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாறு வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் மியா முகி இருவர் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் வெள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கினார். முகி உடனடியாக […]

Continue Reading