வெப் தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுக்கு சம்பளம் ரூ.80 கோடி

இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்தில் சம்பளம், லாபத்தில் பங்கு தொகை என்ற ரீதியில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தற்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ஹிருத்திக் ரோஷனையும் புதிய வெப் தொடரில் நடிக்க […]

Continue Reading

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகைகள்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது. கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போது, இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். இந்நிலையில் […]

Continue Reading

திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் பங்கேற்கும்….மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் சிக்குகிறார்கள். தற்போது மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சமூக விலகல், கை கழுவுதல் நடிகர், நடிகைகள் தவிர மற்றவர்கள் முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்துகிறார்கள். ஆனாலும் படப்பிடிப்புகளிலும் கொரோனா தொற்று பரவுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த 2 […]

Continue Reading

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

இந்தியில், ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆப் வசிப்பூர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். தமிழில், நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் மீது இந்தி நடிகை பாயல் கோஷ், பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். பிரதமர் மோடியை ‘டேக்’ செய்து, அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- டைரக்டர் அனுராக் காஷ்யப் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். என் மீது பாய்ந்து மோசமாக நடந்து கொண்டார். இச்சம்பவம் 2014-2015 […]

Continue Reading

தங்க மோசடி செய்தேனா? ஷில்பா ஷெட்டி விளக்கம்

தமிழில் விஜய்யின் குஷி, பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் சத்யுக் தங்கம் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பணியாற்றினர். இந்த நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்க அட்டைகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சச்சின் ஜோஷி என்பவர் ஒரு கிலோ தங்கம் வாங்கியதாகவும் ஆனால் ஷில்பா ஷெட்டி அதில் மோசடி செய்து விட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார். இது […]

Continue Reading

37 ஆண்டுகளுக்குப் பிறகு…மீண்டும் உருவாகும் முந்தானை முடிச்சு

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே […]

Continue Reading

விக்னேஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருவார். இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் அடிக்கடி கிசுகிசுக்கப்படும். சமீபத்தில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஓணம் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட கேரளா பறந்த இவர்கள், அங்கிருந்து […]

Continue Reading

ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ் ஆகும் அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’

ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ் ஆகும் அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ கொரோனா பரவலால் புதிய படங்களை நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர். பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் அடுத்த மாதம் 2-ந்தேதியும், சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதியும் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் அனுஷ்கா நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் […]

Continue Reading

பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை – சூர்யாவுக்கு ஐகோர்ட்டு அறிவுரை

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை […]

Continue Reading

சுந்தர் சி-யின் அடுத்த படம்…தீபாவளி பண்டிகைக்கு டி.வி.யில் வெளியிட திட்டம்?

ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் அடுத்ததாக ‘மாயாபஜார்’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கிய பத்ரி இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், […]

Continue Reading