கங்கனா ரணாவத் பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமானங்கள் – மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது. இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மராட்டியத்தில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை […]

Continue Reading

நடிகர் துரைப்பாண்டியன் காலமானார்

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார். மௌனம் பேசியதே’, ‘ரன்’, ‘ஜெமினி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் துரைப்பாண்டியன் துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். மேலும் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருக்கிறார். நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைப்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று […]

Continue Reading

போதைப்பொருள் விவகாரம் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி கைது

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும், பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி […]

Continue Reading

நடிகை கங்கனா ரணாவத்துக்கு 24 மணி நேரமும் கமாண்டோ பாதுகாப்பு.அளித்துள்ள மத்திய அரசு

பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், தமிழில் ‘தாம் தூம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது, ‘குயின்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் இமாசலபிரதேசத்தை சேர்ந்தவர்.நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மும்பை நகரம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். பாலிவுட்டில் போதை மருந்து பழக்கம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.அதற்கு இமாசலபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ராம் கடம் என்பவர், இந்தி படவுலகின் போதை மருந்து […]

Continue Reading

கஞ்சாவை துளசியுடன் ஒப்பிட்டு பேசி…சிக்கலில் சிக்கிய தமிழ் நடிகை

திரையுலகில் போதை பொருட்கள் தாராளமாக புழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளை பயன்படுத்தியதாக பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தி பட உலகையும் போதை பொருள் விவகாரம் உலுக்கி வருகிறது. இந்தி நடிகை ரியா சக்கரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரியாவின் சகோதரர் கைதாகி உள்ளார். இந்த நிலையில் சுமிதா என்ற பெயரில் படங்களில் நடித்து வரும் கன்னட நடிகை நிவேதிதா […]

Continue Reading

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் சோதனை

கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி […]

Continue Reading

நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார்

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உத்தமபுத்திரன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் தொடர்ந்து தமிழில் இவர் நடிக்கவில்லை. இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு […]

Continue Reading

மும்பை வருகிறேன் தடுத்து பாருங்கள் – கங்கனா ரணாவத் சவால்

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி வருகிறார். வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மராட்டிய அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசாரையும் சாடினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும் மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். மராட்டிய மந்திரி அனில் […]

Continue Reading

தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை

தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை நேற்று (02.09.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்: 1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு […]

Continue Reading

பலரின் வாழ்க்கை, தொழிலை அழித்த கரண்ஜோஹர் – கங்னா ரணாவத் குற்றச்சாட்டு

திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர் என பாலிவுட் நடிகை கங்னா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். திரைப்பட மாபியாவின் முக்கிய குற்றவாளி கரண்ஜோஹர். பலரின் வாழ்க்கை, தொழிலை அழித்த கரண்ஜோஹர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். கரண்ஜோஹர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பிரதமர் அலுவலகத்தை குறிப்பிட்டு கங்கனா ரணாவத் டுவீட் செய்துள்ளார்.

Continue Reading