Mamangam Press Meet

The epic tale of Megastar Mammootty starrer  “Mamangam” is all set to emblazon the screens with its gigantic appeal from December 12, 2019. With the entire crew involved in the spree of promotions, Megastar Mammooty, Unni Mukundan, Iniya, Director Padmakumar and others from the team were present to interact with the media and press about […]

Continue Reading

‘தனுசு ராசி நேயர்களே’ படம் குறித்து ஹரீஷ் கல்யாண்..

    பனி படரத்தொடங்கியிருக்கும் இந்த இதமான தட்ப வெட்ப நிலையில் நெஞ்சுக்கு நெருக்கமாக அமையக்கூடிய நகைச்சுவை கலந்த காதல் படத்தைப் பார்ப்பதைத் தவிர வேறு எது அழகாகவும் அற்புதமான அனுபவமாகவும் இருக்க முடியும்? ஆம்… எதிர்வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ முழு நீள பொழுதுபோக்குச் சித்திரமாக அனைத்து தரப்பையும் மகிழ்விக்கவிருக்கிறது. இது குறித்து படக்குழு முழுவதும் அதிகபட்ச உற்சாகத்தில் திளைக்க, நாயகன் ஹரீஷ் கல்யாண் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா […]

Continue Reading

மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன். 44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார். நான் பாடல் எழுத  வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார். அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார். இசையமைப்பாளர் தமன் பேசும்போது, “நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம். அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது. அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன். ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார். படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,  “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது. இங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.   நடிகை ரோகிணி பேசும்போது, “என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன். நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள். அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது. இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார். ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசும்போது,  “இது எனது முதல் படம். இப்படிப்பட்ட ஒரு படம் என் முதல் படமாக அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்எனது நன்றிகள். 57 நாட்களில் 47 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது. இது எனது உதவியாளர்களின் உதவியால்தான் சாத்தியமானது…” என்றார். நடிகை இந்துஜா பேசும்போது, “சாந்தகுமார் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஒரு தூய்மையான படைப்பாளி. இது ஒரு வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவம். எனது அடுத்தநன்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு. மூன்றாவது நன்றி ஆர்யாவுக்கு. அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்த்து. மஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகை. இந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…” என்றார். நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது,  “இந்த மகாமுனி படத்தில் ஒரு பங்காக நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாகவருத்தப்பட்டிருப்பேன். நானே என்னை இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், சாந்தகுமார் ஸார் அப்படியொரு கதாபாத்திரத்தைஎனக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. இது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று. இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை செய்வது எனக்கு மிகவும்வசதியாக இருந்தது. இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் சமயத்தில் ஜெயசுதா மேடம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும்கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடின, அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது. ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவேதயாராக நிற்பார். இந்தப் படத்தினால் அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா. இயக்குநர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். […]

Continue Reading

முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார்

முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை ” இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை,  மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி […]

Continue Reading

நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி

  விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், […]

Continue Reading

A1  படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் !!

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி   வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில், ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது, ” இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில்  அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன்  அவர்களோடு […]

Continue Reading

Seema Raja Press Meet Photos

[ngg_images source=”galleries” container_ids=”553″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] Seema Raja 

Continue Reading

Katerri Press Meet Photos

[ngg_images source=”galleries” container_ids=”552″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″] Katerri

Continue Reading