கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

cinema news News

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

டிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan)

பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது

கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ எதிர்வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை ‘மக்கள் காவலன்’ படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ‘மக்கள் காவலன்’. பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கும் பிர்லா ஸ்டுடியோஸின் லட்சியத்தையும்…. உணர்வு பூர்வமான மற்றும் சமூக பின்னணி கொண்ட சிறந்த சினிமா கதைகளை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும்… இந்த திரைப்படம் ஒன்றிணைக்கிறது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. அவரின் தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது. ‘மக்கள் காவலன்’ படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்க பேசுகிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு… அவரை சரணடைவது அல்லது எதிர்த்து போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக தொடங்கும் இது… மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத… ஒரு தலைவராக மாற வேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது. போராட்டம் தீவிரம் அடையும் போது.. அதற்கான விலையும் அதிகரிக்கிறது. அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும், மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறைய தொடங்குகிறது. தனது பிறப்பு சூழலோ… அல்லது தன்னை சுற்றியுள்ள தடைகளோ… தனது லட்சியத்தின் எல்லையை தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே.. இப்படத்தின் மையப் பொருளாகும். உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும்… அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும்… இத்திரைப்படம் அழுத்தமாக பேசுகிறது.

மணிகண்டனின் பிறந்த நாளன்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த மன உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது..

எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கி.. இன்று ஒரு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் மணிகண்டனின் பயணமானது விடாமுயற்சி- தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் – மற்றும் தனது கலை மீதான அசைக்க இயலாத அர்ப்பணிப்பு – ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர் .கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன்,  உன்னி மாயா,  திவ்யா ஸ்ரீபாதா ,ஜென்சன் திவாகர், லல்லு , ஜெமினி மணி,  ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ படத்திற்கு பிறகு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் மோசஸ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை பாப்பநாடு சி. உதயகுமார் கவனித்திருக்கிறார். சண்டை பயிற்சியை டான் அசோக் – ஒலி வடிவமைப்பினை ஆண்டனி ஜெயரூபன் – ஆடை வடிவமைப்பை சுரேஷ்குமார்-  ஒப்பனையை ராமச்சந்திரன் – ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

*BIRLA STUDIOS AND NEELAM STUDIOS ANNOUNCE MAKKAL KAAVALAN’S WORLDWIDE THEATRICAL RELEASE ON 4 DECEMBER 2026*

Release date of the K. Manikandan-led action drama unveiled on the actor’s birthday

Birla Studios and Neelam Studios today announced that their upcoming action drama Makkal Kaavalan, starring K. Manikandan, will release worldwide in theatres on 4 December 2026.

The release date was unveiled on the occasion of Manikandan’s birthday, celebrating the actor and his journey of excellence in the industry,  whose own journey reflects many of the ideas at the heart of Makkal Kaavalan — ambition, resilience and the determination to keep moving forward against the odds.
Following the resounding theatrical success of Bison Kaalamaadan, Makkal Kaavalan is the next film from the creative partnership between Birla Studios and Neelam Studios, bringing together Birla Studios’ ambition for big-curtain cinema with Neelam Studios’ commitment to stories that are emotionally resonant, socially rooted and unmistakably cinematic.

The film also marks K. Manikandan’s next project following the commercial success of Good Night, Lover and Kudumbasthan, a remarkable run that has established him as one of Tamil cinema’s most dependable and sought-after leading actors. With Makkal Kaavalan, Manikandan becomes the leading man in an action drama for the first time.

Written and directed by Santhosh Kumar, Makkal Kaavalan follows a simple man determined to live with dignity until a corrupt system leaves him with only two choices: surrender or resist. What begins as one man’s struggle for survival grows into something far larger, forcing him to become a leader he never sought to be. As the battle intensifies, the price of resistance mounts and the line between an ordinary man and a people’s protector begins to disappear.

At the heart of the film is the idea of a man who refuses to allow the circumstances of his birth or the barriers around him to define the scale of his ambition. It is a story about the courage to dream beyond the limits imposed by the world — and the tenacity to keep climbing until those limits cease to matter.

That spirit also gives the film’s release-date announcement on Manikandan’s birthday a particular resonance. From beginning his career across writing, dubbing and supporting performances to becoming a leading man, Manikandan’s own trajectory has been built through persistence, reinvention and an unwavering commitment to his craft.

K. Manikandan stars in the titular role alongside Vaagai Chandrasekar, A Venkatesh, R.K. Vijaymurugan, Shanmugam Muthusamy, Sabumon, Unni Maya, Divya Sripada, Jenson Dhivakar, Lallu, Gemini Mani and Raghu.The film features Cinematography by Pratheepan Selvaratnam, Editing by Arul Moses, Production Design by Pappanadu C Uthayakumar, Stunts by Don Ashok, Sound Design by Anthony Jayaruban, Costume Design by Sureshkumar and Makeup by Ramachandran. In continuation of the winning relationship after Bison Kaalamaadan, Makkal Kaavalan is a Nivas K Prasanna musical.Makkal Kaavalan releases worldwide in theatres on 4 December 2026.